ETV Bharat / bharat

மனைவி இறந்த துயரம்... கணவர் தூக்கிட்டு தற்கொலை! - andhra crime news

அமராவதி: மனைவி இறந்ததை தாங்க முடியாத துயரத்திலிருந்த கணவர், மனைவி புதைக்கப்பட்ட இடத்திலேயே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

husband
husband
author img

By

Published : Jun 12, 2020, 2:02 AM IST

ஆந்திராவில் சித்தூர் மாவட்டம் கங்கோந்தி காலனியை சேர்ந்தவர் நயனப்பா. இவரின் மனைவி 2 மாதங்களுக்கு உடல்நலக்குறைவால் உயிரிழந்துள்ளார். மனைவி இறந்த நாளிலிருந்தே நயனப்பாவுக்கு உடல்நிலை சரியில்லாமல் ஆகியுள்ளது.

வருத்ததிலிருந்த நயனப்பா நேராக மனைவியின் கல்லறைக்கு சென்றுள்ளார். அப்போது, மனைவி கல்லறைக்கு அருகிலிருக்கும் மரத்தில் மனைவியின் புடவையிலேயே தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் உடலை மீட்டு உடற்கூறாய்வுக்கு அனுப்பி வைத்தனர்‌. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் விசாரனை மேற்கொண்டுவருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.