ETV Bharat / bharat

60% கரோனா பாதிப்பை மகாராஷ்டிரா உள்ளிட்ட 5 மாநிலங்கள் கொண்டுள்ளன! - கோவிட்-19 பாதிப்பு

டெல்லி : மகாராஷ்டிரா, தமிழ்நாடு உள்பட ஐந்து மாநிலங்கள் நாட்டில் 60 விழுக்காடு கோவிட்-19 பாதிப்பைக் கொண்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தகவல் வெளியிட்டுள்ளது.

60 % பாதிப்பை மகாராஷ்டிரா உள்ளிட்ட 5 மாநிலங்கள் கொண்டுள்ளன!

author img

By

Published : Sep 10, 2020, 5:10 PM IST

உலகளாவிய பெருந்தொற்றுநோயான கரோனா வைரஸ் பாதிப்பு நிலவரம் மற்றும் முன்னெடுக்க வேண்டிய பணிகள் குறித்து சுகாதாரத் துறை அமைச்சகம் மாநில அரசுகளுடன் இன்று (செப்டம்பர் 10) கலந்துரையாடலை நடத்தியது. அதில், பல்வேறு முக்கிய செயல்திட்டங்கள் குறித்து விவாதிக்கப்பட்டதாக அறிய முடிகிறது.

பின்னர் கோவிட்-19 பாதிப்புகள் குறித்து சுகாதாரத் துறை அமைச்சகம் குறிப்பு ஒன்றை வெளியிட்டது. அதில், "நாடு முழுவதும் தீவிரமடைந்துவரும் கோவிட்-19 பெருந்தொற்று நோயின் தாக்கம் மத்திய அரசுக்கும் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, ஐந்து குறிப்பிட்ட மாநிலங்களில் ஏற்பட்டுள்ள கோவிட்-19 பாதிப்பு நாடு முழுவதும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

மகாராஷ்டிரா 21.7 விழுக்காடும், ஆந்திரப்பிரதேசம் 11.8 விழுக்காடும், தமிழ்நாடு 10.8 விழுக்காடும், கர்நாடகா 9.4 விழுக்காடும், உத்தரப் பிரதேசம் 6.4 விழுக்காடும் என இந்த ஐந்து மாநிலங்கள் இந்தியாவில் மொத்த பாதிப்பு வழக்குகளில் 60 விழுக்காடு பதிவு செய்துள்ளன. இந்த மாநிலங்கள் அனைத்தும் கரோனா கண்டறிதல் சோதனைகளை அதிகரிக்கவும், பாதிக்கப்பட்டவர்களை கண்காணிக்கவும், சிறந்த சிகிச்சையளிக்கவும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளன.

கடந்த 24 மணி நேரத்தில் இந்தியா முழுவதும் மொத்தம் புதிதாக 95 ஆயிரத்து 735 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவற்றில் மகாராஷ்டிரா, கர்நாடகா மற்றும் ஆந்திரப்பிரதேசம் ஆகிய மாநிலங்கள் மொத்தமாக 49 விழுக்காடு பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். உத்தரபிரதேசம், தமிழ்நாடு, தெலங்கானா, அஸ்ஸாம், ஒடிசா, சத்தீஸ்கர் உள்ளிட்ட ஆறு மாநிலங்கள் 25.2 விழுக்காடும் அதிகமான பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. கேரளா, டெல்லி, மேற்கு வங்கம், மத்தியப் பிரதேசம், ஹரியானா, பஞ்சாப், குஜராத், ஜார்க்கண்ட், பீகார், ராஜஸ்தான் மற்றும் ஜம்மு-காஷ்மீர் 21.7 விழுக்காடு ஆகும். மீதமுள்ள 4.1 விழுக்காடு பாதிப்பு நாட்டின் இதர பகுதிகளில் ஏற்பட்டுள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில், இந்தியா நாடு முழுவதும் 1,172 பேர் வைரஸ் பாதிப்பால் உயிரிழந்தனர். அதில், 380 பேர் மகாராஷ்டிராவிலும், 128 பேர் கர்நாடகாவிலும், 78 பேர் தமிழ்நாட்டிலும் ஆகும். மொத்த இறப்புகளில் (75 ஆயிரத்து 65 பேர் உயிரிழப்பு) மகாராஷ்டிரா, தமிழ்நாடு, கர்நாடகா, டெல்லி, ஆந்திரா உள்ளிட்ட ஐந்து மாநிலங்கள் 69 விழுக்காடு இறப்பை கண்டுள்ளன" என குறிப்பிடப்பட்டுள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.