ETV Bharat / bharat

விசாகப்பட்டினத்தில் தனியார் மருந்து தயாரிக்கும் நிறுவனத்தில் பயங்கர தீ விபத்து - ஒருவர் உயிரிழப்பு

விசாகப்பட்டினம்: தனியார் மருந்து தயாரிக்கும் நிறுவனத்தில் திங்கள்கிழமை (ஜூலை 13) நள்ளிரவு ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார், ஒருவர் காயமடைந்தார்.

fire
fire
author img

By

Published : Jul 14, 2020, 12:33 AM IST

Updated : Jul 14, 2020, 10:43 AM IST

ஆந்திர மாநிலம், விசாகப்பட்டினம் மாவட்டம் பரவாடா என்ற பகுதியில், 80க்கும் மேற்பட்ட மருந்துகள் தயாரிக்கும் தனியார் கம்பெனிகள் செயல்பட்டுவருகின்றன. இப்பகுதியில் செயல்பட்டுவரும் ராம்கி குழுமத்துக்குச் சொந்தமான மருந்து தயாரிக்கும் நிறுவனத்தில், திங்கள்கிழமை நள்ளிரவு (ஜூலை 13) திடீரென பெரும் சத்தம் எழுந்தது.

இதைக்கேட்ட அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள், நிறுவன ஊழியர்கள் அதிர்ச்சியடைந்தனர். தொடர்ந்து வான் உயரத்துக்கு மளமளவென தீப்பற்றியது. இது குறித்து தகவலறிந்த காவல் துறையினர், தீயணைப்புத் துறையினர், சம்பவ இடத்தைச் சுற்றி வசிக்கும் பொதுமக்கள், ஊழியர்களை வெளியேற்றும் பணியில் ஈடுபட்டனர்.

தனியார் மருந்து தயாரிக்கும் நிறுவனத்தில் ஏற்பட்ட தீ விபத்து

தீ விபத்து நடைபெற்ற பகுதியில் 9க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்களில் சென்றிருக்கும் தீயணைப்பு வீரர்கள், தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார், ஒருவர் காயமடைந்துள்ளார்.

தனியார் மருந்து தயாரிக்கும் நிறுவனத்தில் பயங்கர தீ விபத்து

இதையும் படிங்க:என்.எல்.சி விபத்து: உயிரிழந்தோர் எண்ணிக்கை 14 ஆக உயர்வு!

Last Updated : Jul 14, 2020, 10:43 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.