*நாளையிலிருந்து மெட்ரோ ஊழியர்கள் வேளையில் இடுபடுவர்கள் ..! இரண்டாம் கட்ட முத்தரப்பு பேச்சுவார்த்தை வெற்றி..!*
மெட்ரோ ரயில் பணியாளர்கள் 8 பேரை பணி நீக்கம் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பணியாளர் சங்கம் நடத்திய காலவரையற்ற போராட்டத்திற்கு தீர்வு காணும் வகையில் நேற்று நடைபெற்ற முதல்கட்ட பேச்சுவார்த்தை தோல்வி அடைந்த நிலையில் இன்று இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.
சென்னை மெட்ரோ ரயில்வேயில் ஒப்பந்த பணியாளர்களை வேலைக்கு அமர்த்தி, நிரந்தர பணியாளர்களை விட கூடுதல் ஊதியம் கொடுத்து அதற்கு எதிர்ப்பு தெரிவித்து சங்கம் துவக்கிய காரணத்திற்காக 8 நிரந்தர பணியாளர்களை திடீர் பணிநீக்கம் செய்து ஏப்ரல் 29 அன்று மதியம் உத்தரவிட்டது மெட்ரோ நிர்வாகம்.
அதைத் தொடர்ந்து ஏப்ரல் 29 மாலை முதல் காலவரையற்ற போராட்டத்தை அறிவித்தது மெட்ரோ பணியாளர்கள் சங்கம்.
மொத்த நிரந்தர பணியாளர்கள் 240 பேரும் கூட்டாக காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டதால், மெட்ரோ ரயில்கள் சரிவர இயங்கவில்லை.
இந்தப் பிரச்சினைகளுக்கெல்லாம் தீர்வு காணும் வகையில் மெட்ரோ ஊழியர் சங்கம், மெட்ரோ நிர்வாகம் மற்றும் தொழிலாளர் நலத்துறை ஆணையம் ஆகியவை இணைந்து நேற்று (ஏப்ரல் 30) பாரிமுனையில் உள்ள தொழிலாளர் நலத்துறை உதவி ஆணையர் அலுவலகத்தில் முத்தரப்பு பேச்சுவார்த்தை நடைபெற்றது.
இந்த முத்தரப்பு பேச்சுவார்த்தையில் தொழிலாளர் நலத்துறை உதவி ஆணையர் ஜானகிராமன், மெட்ரோ ரயில் நிர்வாகம் தரப்பில் பொதுமேலாளர் ராஜரத்தினம், தொழிலாளர்கள் தரப்பில் சி.ஐ.டி.யு தலைவர் சவுந்தரராஜன், நிர்வாகி இளங்கோவன் ஆகியோர் பங்கேற்றனர்.
ஏற்கனவே 8 பேரை பணி நீக்கம் செய்த நிலையில் மேலும் 3 ஊழியர்களை இடைநீக்கம் செய்துள்ளனர்..
நேற்று காலை 11 மணிக்கு துவங்கி பேச்சுவார்த்தை மாலை 5 மணி வரை, 6 மணி நேரம் நடைபெற்ற முத்தரப்பு பேச்சுவார்த்தையில் ஊழியர் சங்கம் வைத்த கோரிக்கைகள் எதையும் மெட்ரோ நிர்வாகம் ஏற்க மறுத்ததால் பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தது.
முதல் கட்ட பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படாத நிலையில் இன்று மாலை 4 மணிக்கு மீண்டும் இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை நடந்து வந்தது ..
இதையடுத்து 8:30 மணியளவில் பேச்சுவார்த்தை முடிந்தது .. பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார் -. சி.ஐ.டி.யு தலைவர் சவுந்தரராஜன்
*சி.ஐ.டி.யு தலைவர் சவுந்தரராஜன் பேட்டி:*
வேலைநிறுத்தம் மற்றும் பணிநீக்கம் வாபஸ் .
22 அம்ச கோரிக்கையில் குறைந்த பட்சம் 8 பேர் வேலை நீக்கம் முக்கிய கோரிக்கையை நேற்றைய நிலையில் நிர்வாகம் ஏற்க மறுப்பு தெரிவித்தது.. இறுதியில் நிர்வாகம் சொன்னதை தொழிலாளர் துறை எதிர்ப்பு தெரிவித்தது.
அரசின் அறிவுரை ஏற்கவெண்டியுள்ளது பிறகு 7 பணியாளர்களும் முறைப்படி மேல்முறையீடு செய்ய வேண்டும் .
தொழிலாளர் துறை சார்பில் 7 பேரும் மேல்முறையீடு செய்வரகள் என்றோம்.. இதை நிறுவக தலையலரிடம் கூறினோம் ..
வேலை நிறுத்த வேண்டும் என்றால் பணியாளர்கள் மீது பழிவாங்குதல் இருக்கக்கூடாது என்றோம் .. பழிவாங்குதல் என்று ஒன்றும் இல்லை அப்படி ஒன்றும் நிகழாது என்று தெரிவித்தனர் ..
குறிப்பிட்ட குற்றச்சாட்டு உள்ளவர்கள் மீது சொல்ல முடியாது எனக்கூறியுள்ளார்கள்..
நல்ல முடிவினை மேல்முறையீடு பின்னர் தெரிவிப்போம் என்றார்கள் .. நல்ல முடிவு வரவில்லை என்றால் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்க படும்..
3 பேர் இடைநீக்கம் குறித்து பின்னர் பார்க்கலாம் என கூறியுள்ளனர்.. கருத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டது ..
22 அம்ச கோரிக்கைகளில் உடன்பாடு இல்லை எனவும் இதற்கான பேச்சுவார்த்தை அடுத்த வாரம் தொடரும் ..
உடனடியாக பணிக்கு திரும்புவார்கள் நாளையிலிருந்து மெட்ரோ வேலை தொடரும்..
*இடம்* :
**குறளகம் ( பிராட்வே ) ,சென்னை*