ETV Bharat / bharat

ஆசியாவின் மிகப் பெரிய குடிசைப் பகுதியான தாராவி, கரோனாவை வென்றது எப்படி? - மகாராஷ்டிராவில் கரோனா தொற்று

மும்பை : ஆசியாவின் மிகப் பெரிய குடிசைப் பகுதியான தாராவி, கரோனாவுக்கு தக்க பாடம் புகட்டியுள்ளது. மெல்ல மெல்ல கோவிட் 19 பாதிப்புகளையும் இறப்புகளையும் குறைத்து வெற்றி கண்டுள்ளது. சுகாதாரப் பணியாளர்கள், மாவட்ட நிர்வாகம், மக்களின் கூட்டு முயற்சியால் அங்கு இயல்பு நிலை திரும்பி வருகிறது.

Dharavi Mission
Dharavi Mission
author img

By

Published : Jun 28, 2020, 6:45 PM IST

ஆசியாவின் மிகப் பெரிய குடிசைப் பகுதியான மும்பையின் தாராவி, கரோனா பாதிப்புகளின் ’ஹாட்ஸ்பாட்’ எனக் கூறப்பட்டது. ஆனால் தற்போது மிகப் பெரிய பாதிப்புகளும் இறப்பு விகிதமும் அங்கு மெல்ல மெல்லக் குறைந்து வருகிறது.

மாநகராட்சி, காவல்துறை, சுகாதாரப் பணியாளர்கள், தொண்டு நிறுவனங்களின் கூட்டு முயற்சியால் அங்கு நோய்த் தொற்று பாதித்தவர்கள் கண்டறியப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டதால், தற்போது அங்கு கரோனா நோயாளிகளின் எண்ணிக்கையும், இறப்பு விகிதமும் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. மே மாதத்தில் சராசரியாக 43 என்று இருந்த அன்றாட பாதிப்பு எண்ணிக்கையை, ஜூன் மாதத்தில் 19ஆக குறைத்ததற்காக மத்திய சுகாதார அமைச்சகம் ’பிரிஹான்’ மும்பை மாநகராட்சியை பாராட்டியுள்ளது.

தாராவியில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளை பின்பற்றுமாறு தில்லி உள்பட பல்வேறு மாநிலங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. தாராவியில் பத்து லட்சத்துக்கும் அதிகமான மக்கள் மிக நெருக்கமான வீடுகளில் வசித்து வருவதால், அன்றாடம் வீடுகளுக்கு வெளியே இருக்க வேண்டிய சூழல். அத்துடன் மிகச் சிறிய வீடுகளில் பலர் தங்கியிருப்பதால், அனைவரும் வீடுகளுக்குள் இருக்கச் சொல்வதும், தனி மனித இடைவெளியைப் பின்பற்ற அப்பகுதி மக்களுக்கு அறிவுறுத்துவதும் மாநகராட்சிக்கு மிகப் பெரிய சவாலாக உள்ளது.

கரோனா பாதிப்பு தொடங்கிய நாட்களில் தாராவியில் யாருமே தாமாக முன்வந்து சோதனை செய்யவில்லை. இதனால் நோய்த் தொற்று பரவல் அதிகமாக இருந்தது. அதனால் மாநகராட்சி அலுவலர்கள் அங்குள்ள உள்ளூர் தனியார் மருத்துவர்களுடன் கைகோர்த்து தாராவி முழுவதும் மருத்துவ முகாம்களை நடத்தினர்.

மிகக் குறைந்த கட்டணங்கள் பெற்றுக் கொண்டு நீண்டகாலமாக தங்களுக்கு சிகிச்சை அளிக்கும் உள்ளூர் மருத்துவர்கள் என்பதால் மக்களுக்கு அவர்கள் மீது நம்பிக்கை இருந்தது. அதனால் தாமாக முன்வந்து உடல் பரிசோதனை செய்து கொண்டனர். ஆங்காங்கே சிறு மருத்துவமனைகள் ஏற்படுத்தப்பட்டு, அதில் நோய்த் தொற்று அறிகுறிகள் இருப்பவர்களைக் கணக்கெடுத்து சோதனை செய்து வந்தனர். தாராவி பகுதியில் சோதனைகள் நடத்தி நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களைக் கண்டறிய உதவிய டாக்டர். அனில் பச்னேக்கர், இது குறித்து ஈடிவி பாரத் இதழுக்கு விவரித்துள்ளார்.

இந்திய மருத்துவ கவுன்சில் உறுப்பினரான டாக்டர். அனில் பச்னேக்கர், கடந்த 35 ஆண்டுகளாக தாராவியில் மக்களுக்கு மருத்துவ சேவை புரிந்து வருகிறார். அவர் கூறும்போது, “ஒரு வாரத்திற்குள் வீடு வீடாகச் சென்று 47,500 பேருக்கு சோதனைகள் செய்யப்பட்டுள்ளன. அவர்களில் 1100 பேர் தனிமைப்படுத்தப்பட்டனர். 150 பேருக்கு தொடர்ந்து நடத்தப்பட்ட சோதனைகளில் நோய்த் தொற்று மீண்டும் உறுதி செய்யப்பட்டதால் மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்” என்றார்.

தேசிய அளவிலான பொதுமுடக்கத்தின் எதிரொலியாக, நான்கு லட்சத்துக்கும் அதிகமான புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் அங்கிருந்து தங்கள் சொந்த ஊர்களுக்கு சென்றதால், தாராவியில் நெருக்கம் சற்று குறைந்தது. இதனால் மும்பை மாநகராட்சியினர் அங்கு கோவிட்-19 சோதனைகளை மேலும் முடுக்கி விட்டனர்.

அங்குள்ள கிளினிக்குகளில் கோவிட் சோதனைகளை அதிகப்படுத்துதல், வீடு வீடாகச் சென்று கணக்கெடுப்பு செய்தல், தனிமைப்படுத்தலுக்கான முறையான இடங்களை ஏற்படுத்துதல், அப்பகுதி முழுவதும் கிருமி நாசினி தெளித்தல் போன்ற பணிகளோடு, கை கழுவுதல், சானிடைசர் பயன்படுத்துதல், முகக் கவசம் அணிதல் போன்ற விழிப்புணர்வை ஏற்படுத்தும் பணிகளை மாநகராட்சி மேற்கொண்டது.

தாராவியில் மேற்கொள்ளும் பணிகள் குறித்து மும்பை மாநகராட்சியின் துணை ஆணையர் கிரண் திகாவ்கர் நமது ஈடிவி பாரத் இதழுக்கு கூறும் போது, “தாராவியில் அதிக அளவிலான சுகாதாரப் பணியாளர்கள் களமிறக்கப்பட்டுள்ளனர். அங்கு மொபைல் வேன்களும் அனுப்பப்பட்டுள்ளன. நெருக்கமான பகுதி என்பதால் தனிமைப்படுத்தும் மையங்களும் அங்கு அமைக்கப்பட்டன.

அவர்கள் அப்பகுதியைத் தாண்டி வேறு எங்கும் செல்ல வேண்டியதில்லை என்ற நிலை உருவாக்கப்பட்டது. பாதிக்கப்பட்ட பகுதிகளில் மக்களை வீடுகளுக்குள்ளேயே இருக்கச் செய்யும் நடவடிக்கை திறம்பட மேற்கொள்ளப்பட்டது. மக்கள் உணவுக்காக வெளியே வராத வண்ணம், மதிய உணவு, இரவு உணவு ஆகியவற்றுக்காக 21,000 உணவுப் பொட்டலங்கள் விநியோகிக்கப்பட்டன. அவர்களது அடிப்படைத் தேவைகளை மாநகராட்சி கவனித்துக் கொள்கிறது," என்று கூறினார்.

இது குறித்து மூத்த காவல்துறை ஆய்வாளர் ரமேஷ் நாங்ரே கூறும்போது, “இந்தப் பணியில் க்ரெடாய்-எம்சிஎச்ஐ மற்றும் பாரதிய ஜெயின் சங்கடன் உள்பட பல்வேறு தொண்டு நிறுவனங்கள் முழு ஈடுபாட்டைக் காட்டுகின்றன. இதில் உள்ளூர் காவல் துறையின் பங்கு மிக முக்கியமானது. மொபைல் வேன்களில் பல்வேறு மொழிகளில் அறிவிப்புகளும் விழிப்புணர்வு செய்திகளும் ஒலிபரப்பப்பட்டன.

காவல் துறையினர் 24 மணி நேரமும் தாராவியின் ஒவ்வொரு தெருக்களிலும் ரோந்துப் பணியில் ஈடுபட்டு மக்களை வீடுகளுக்குள்ளேயே இருக்கச் செய்தனர்" என்றார்.

மும்பையின் முக்கிய அங்கமாகவே மாறிவிட்ட தாராவியில் மக்களின் ஒத்துழைப்பும் அதிக அளவில் இருக்கிறது. அப்பகுதி முழுக்க மிகப் பெரிய குடும்பமாக வாழும் மக்கள், கோவிட் 19 பாதிப்புகளின் தீவிரத்தை புரிந்து கொண்டு, அதனை வெற்றி கொள்ள முழுமூச்சாக செயல்படுகின்றனர்.

மக்கள் தங்களது அறிகுறிகளை மறைத்துக்கொண்டிருப்பதைக் காட்டிலும், தாங்களாகவே முன்வந்து தங்களைப் பதிவு செய்வதால், நோய்த் தொற்று கண்டறியும் பணிகள் எளிதாகியுள்ளன. கரோனாவுக்கு எதிரான இந்தப் போரில் 33 காவல் துறையினர் பாதிக்கப்பட்டதோடு, ஒரு அலுவலர் உயிரிழந்துள்ளார். ஆனாலும் காவல் துறையினர் தொடர்ந்து போராடி வருகின்றனர்.

தாராவியில் மக்கள் ஒருவருக்கொருவர் உதவி செய்து கொண்டு தங்கள் பொறுப்புகளை உணர்ந்து செயல்படுவதால் அலுவலர்களின் பணிகள் எளிதாகின்றன.

ஆயினும் நோய்த் தொற்று பரவலைத் தடுக்க மேலும் பல களப் பணியாளர்கள் தேவைப்படுகின்றனர். இதை உணர்ந்து, அரசு களப் போராளிகளை அதிகரிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. அனைத்து தரப்பினரின் கூட்டு உழைப்பால் தாராவியில் ஏற்படவிருந்த மிகப் பெரிய அபாயம் தவிர்க்கப்பட்டு, நோயாளிகள் எண்ணிக்கை குறைக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: உங்கள் சானிடைசர் பாதுகாப்பானதா?

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.