கரோனா பெருந்தொற்று பரவலைத் தடுப்பதற்காக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து கட்டுப்படுத்தப்படாத பகுதிகளில் உணவகங்கள், கடைகள் திறக்கப்பட்டன.
அந்த வகையில், பிகார் மாநிலம் பாட்னாவில் திறக்கப்பட்ட ஒரு உணவகத்தில், வாடிக்கையாளர்களின் நலனை கருத்தில் கொண்டு ஊழியர்கள் பிபிஇ உடையுடன் பணிபுரிந்து வருகின்றனர்.
இது குறித்து பேசிய உணவக மேலாளர், வாடிக்கயாளருடன் நேரடி தொடர்பிலிருக்கும் ஊழியர் பிபிஇ உடையுடன் இருப்பதால் இருவரும் பாதுகாப்பாக உணர்வார்கள் என்றும், அரசின் அறிவுறுத்தலுக்கேற்ப கடைக்கு வரும் வாடிக்கையாளர்களுக்கு முகக்கவசம் கட்டாயம், தனி மனித இடைவெளியைப் பின்பற்றுதல், கிருமி நாசினி கொண்டு உணவகத்தை சுத்தம் செய்தல் போன்ற அனைத்தும் பின்பற்றப்படுவதாகவும் தெரிவித்தார்.
இந்த உணவகத்தின் நடவடிக்கைகள் மக்கள் மத்தியில் கரோனா தொற்று குறித்த விழிப்புணர்வையும் ஏற்படுத்தி வருகிறது.