மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஏழு கட்டங்களாக கடந்த ஏப்.11ஆம் தேதி முதல் மே 19ஆம் தேதி வரை நடந்து முடிவடைந்துள்ளது. இதில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு, நாளை தேர்தல் முடிவு அறிவிக்கப்பட உள்ளது.
தேர்தல் முடிவுகள் வெளியாவதையொட்டி, நாளை வன்முறை சம்பவங்களுக்கு வாய்ப்புள்ளதாக, மாநில அரசுகளுக்கு உள்துறை அமைச்சகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இது குறித்து உள்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், "வன்முறை சம்பவங்களை தடுக்க பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும். குறிப்பாக வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டிருக்கும் ஸ்ட்ராங் ரூம்களிலும், வாக்குகள் எண்ணப்படும் மையங்களிலும் பாதுகாப்பை அதிகரிக்க வேண்டும்", என்று அனைத்து மாநில தலைமை செயலர்கள், காவல் துறை இயக்குநர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.