கரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் அமல்படுத்தப்பட்டிருந்த ஊரடங்கு கர்நாடக மாநிலத்தில் மாநிலத்தில் முழுமையாக அகற்றப்பட்டது. இருந்தபோதிலும், கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு மண்டலங்களில் உள்ளவர்களுக்கு மட்டும் எவ்வித தளர்வுகளும் வழங்கப்படவில்லை.
பொதுமக்கள் கூட்டமாக கூடுவதையும், தகுந்த இடைவெளியை கடைப்பிடிக்கவும், கட்டுப்பாட்டு மண்டலங்களில் உணவு தானியங்களை விநியோகிப்பதற்கான அனைத்து நியாய விலைக் கடைகளும் மூடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கட்டுப்பாட்டு பகுதிகளில் வைரஸ் பரவாமல் தடுக்க மக்கள் மற்றும் வாகனங்களின் நடமாட்டம் தடைசெய்யப்பட்டுள்ளதால், குடும்ப அட்டை வைத்திருப்பவர்கள் அனைவருக்கும் வீடு தேடி ரேஷன் பொருள்கள் வரும் என்று மாநில உணவு மற்றும் பொது விநியோகத் துறை அலுவலர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
நகரத்தில், பொது விநியோக முறை திட்டத்தின் (பி.டி.எஸ்) கீழ் மாதந்தோறும் 17 லட்சம் குடும்ப அட்டைதாரர்கள் உணவு தானியங்களை பெற்று வருகின்றனர்.
குடும்ப அட்டை இல்லாதவர்களுக்கு தங்களது அருகிலுள்ள நியாய விலைக் கடைகளில் பதிவு செய்வதற்கான தேவைக்கேற்ப உணவு தானியங்கள் வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.