மே 3ஆம் தேதி ஜம்மு - காஷ்மீரின் ஹாண்ட்வாரா பகுதியில் நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலில் ஐந்து ராணுவ வீரரகள், ஒரு காவல் அலுவலர் ஆகியோர் கொல்லப்பட்டனர். இதையடுத்து மே 6ஆம் தேதி இந்திய ராணுவம் சார்பாக அவந்திபோராவில் நடத்தப்பட்ட தாக்குதலில் ஹிஸ்புல் முஜாஹிதீன் அமைப்பின் காஷ்மீர் தலைவர் ரியால் நைக்கோ உள்பட நான்கு பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.
இந்நிலையில் ரியாஸ் நைக்கோவுக்கு நடத்தப்பட்ட இரங்கல் கூட்டத்தில் ஹிஸ்புல் முஜாஹிதீனின் தலைவரும், சர்வதேச பயங்கரவாதி என அறிவிக்கப்பட்டு தேடப்பட்டு வருபவருமான சையத் சாலாவுதீன் பங்கேற்ற வீடியோ வெளியாகியுள்ளது.
அந்த இரண்டு நிமிட வீடியோவில், ரியாஸ் நைக்கோ மற்றும் அவரது கூட்டாளிகளால் இந்திய ராணுவத்திற்கு சில பாதிப்புகளை ஏற்படுத்தியிருந்தாலும், இந்தியாவிடம் தான் இன்னமும் அதிகாரம் உள்ளது எனப் பேசியுள்ளார்.
தொடர்ந்து சையத் சாலாவுதீன் சில வார்த்தைகள் கூறினார். அதையடுத்து ஹாண்ட்வாரா தாக்குதலுக்கு பொறுப்பேற்றுக் கொண்டுள்ளார். இந்த சம்பவம் பல்வேறு தரப்பினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: எவரெஸ்ட்டுக்கு உரிமை கொண்டாடும் சீனா, கண்டிக்கும் நோபாளம்