ETV Bharat / bharat

5 தொகுதிகள் கேட்டு அடம்பிடிக்கும் முன்னாள் முதலமைச்சர்! - கேக்கும்

பாட்னா: லாலு பிரசாத் யாதவ்வின் கூட்டணியில் பிகார் முன்னாள் முதலமைச்சர் ஜிதன் ராம் மாஞ்சி மக்களவைத் தேர்தலில் போட்டியிட தங்கள் கட்சிக்கு ஐந்து தொகுதிகள் கேட்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

முதல்வா்
author img

By

Published : Mar 17, 2019, 8:19 AM IST

மக்களவைத் தேர்தலின் கூட்டணி பேச்சுவார்த்தை இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில் பிகாரில்ராஷ்ட்ரிய ஜனதா கட்சி தலைமையிலான காங்கிரஸ் கூட்டணியில் இடம்பெற்றுள்ள அம்மாநில முன்னாள் முதலமைச்சர் ஜிதன் ராம் மாஞ்சியின் இந்துஸ்தான் அவாமி மோர்ச்சா ஐந்து தொகுதிகளை கேட்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

இது பற்றி அவர் கூறுகையில், பிகாரில் ராஷ்ட்ரிய ஜனதா கட்சிக்கு அடுத்தபடியாக தன் கட்சிக்குத்தான் மக்கள் செல்வாக்கு அதிகம் இருக்கிறது என தெரிவித்தார். எனவே நல்ல முடிவை ராஷ்ட்ரிய ஜனதா கட்சி எடுக்கும் என தான் நம்புவதாகவும் அவர் கூறியுள்ளார்.

ஏற்கனவே காங்கிரஸ் கட்சிக்கு 11 தொகுதிகள் கொடுத்ததால் மற்ற கட்சியினருக்கு தொகுதிகள் ஒதுக்குவதில் சிக்கல் எழுந்துள்ளதாக அரசியில் வல்லுநர்கள் கருதும் நிலையில் இந்துஸ்தான் அவாமி மோர்ச்சா ஐந்து தொகுதிகளை கேட்பது பிகாரில்ராஷ்ட்ரிய ஜனதா கட்சி தலைமையிலான காங்கிரஸ் கூட்டணியில் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.

40 தொகுதிகள் கொண்ட பிகாரில் ராஷ்ட்ரிய ஜனதா கட்சி 20-க்கு குறைவான இடங்களில் போட்டியிடாது எனவும், மற்றக் கட்சிகளுக்கும் தொகுதி ஒதுக்கவேண்டி இருப்பதாலும் இந்துஸ்தான் அவாமி மோர்ச்சாவுக்கு ஓரிரு தொகுதிகள் மட்டுமே ஒதுக்கப்பட உள்ளதாக அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.

Intro:Body:

jitan ram manjhi

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.