இந்தியாவில் கரோனா பெருந்தொற்றால் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இதனால் இடம்பெயர்ந்த தொழிலாளர்கள்தான் பெரிதும் பாதிக்கப்பட்டனர். பிழைக்க வந்த ஊரில் கடன் கொடுக்கக்கூட ஆளில்லாமல், உணவின்றி தவிக்கும் சூழலுக்கு தள்ளப்பட்டனர்.
இந்நிலையில், இமாச்சலப் பிரதேசத்தைச் சேர்ந்த தொழிலாளர்களை அழைத்து வருவதற்காக, அம்மாநில அரசு நோடல் அலுவலர்கள் மூலம் ஏற்பாடு செய்தது. அதன்படி, பெங்களூரிலிருந்து ஒரு ரயில்ம, கோவா, மகாராஷ்டிராவிலிருந்து இரண்டு ரயில்கள் என மூன்று ரயில்களை ஏற்பாடு செய்தது.
மகாராஷ்டிராவிலிருந்து புறப்பட்ட இரண்டு ரயில்களில் ஒன்று மும்பையிலிருந்தும், மற்றொன்று நாக்பூரிலிருந்தும் புறப்பட்டன. இந்த மீட்பு பணி குறித்து அலுவலர்கள் கூறும்போது, மே 13ஆம் தேதி கோவா, கர்நாடகா, மகாராஷ்டிராவிலிருந்து 5 ரயில்களில் 3 ஆயிரத்து 491 பேர் பாதுகாப்பாக அழைத்து வரப்பட்டனர் என்றனர்.
கோவாவிலிருந்து உனாவுக்கு 2 ஆயிரத்து 74 பேர், நாக்பூரிலிருந்து பதான்கோட்டிற்கு 78 பேர், மும்பையிலிருந்து உனாவுக்கு 697 பேர், கர்நாடகா, பெங்களூரிலிருந்து 642 பேர் முறையே சிறப்பு ரயில்கள் மூலம் அழைத்துவரப்பட்டனர்.
இது குறித்து உனா மாவட்டத்தின் துணை ஆணையர் சந்தீப் குமார், “மே 13ஆம் தேதி கர்நாடகா, கோவா, மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களிலிருந்து இயக்கப்பட்ட 4 சிறப்பு ரயில்களில் 3 ஆயிரத்து 413 பேர் உனாவுக்கு வந்துள்ளனர். இதைப் போலவே, மே 15ஆம் தேதி பெங்களூரிலிருந்து 642 பேர், கோவாவிலிருந்து ஆயிரத்து 486 பேர், மும்பையிலிருந்து 697 பேர் உனா வந்தடைந்தனர். மே 18ஆம் தேதி கோவாவிலிருந்து 588 பேர் வந்து சேர்ந்தனர்” என்றார்.
இதையும் படிங்க: சீன எல்லைக்குள் அத்துமீறியதா இந்தியா ?