தர்மசாலா: இமாச்சலப் பிரதேச எம்எல்ஏவும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ஆஷா குமாரியை, மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா காமன்வெல்த் நாடாளுமன்ற சங்கத்தின் இந்தியாவின் நான்காவது மண்டலத்தின் உறுப்பினராக நியமித்துள்ளார். அவர் இந்த பதவில் மூன்று ஆண்டுகள் இருப்பார் எனதெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக நமது ஈடிவி பாரத்திடம் பேசிய ஆஷா குமாரி, "தன்னை காமன்வெல்த் நாடாளுமன்ற உறுப்பினராக நியமித்த மக்களவை சபாநாயகருக்கு நன்றிகள். சங்கத்தின் உறுப்பினராக உலக அரங்களில் பெண்களுக்காக தொடர்ந்து குரல் கொடுப்பேன். இமாச்சலப் பிரதேசத்திலிருந்து பணிபுரிய எனக்கு வாய்ப்பு கிடைத்தது மிகவும் பெருமையான தருணம்" என்றார்.
முதல் முறையாக இமாச்சலப் பிரதேசத்தின் பெண் எம்எல்ஏ ஒருவர் சிபிஏ உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார். தற்போதுவரை உலக அளவில் சிபிஏ 9 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு,180 கிளைகள் உள்ளன.
இதையும் படிங்க: கோவிட்-19 தடுப்பூசியில் அரசியலை கலக்க வேண்டாம் - மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங்