டெல்லி: ஹிமாச்சலப் பிரதேச முதலமைச்சர் ஜெய்ராம் தாக்கூர், அம்மாநிலத்தின் பொன்விழா ஆண்டிற்கு வருமாறு டெல்லியில் பிரதமர் மோடியை நேரில் சந்தித்து அழைப்பு விடுத்தார். கரோனா காலம் என்பதால், பொன்விழா ஆண்டு விழாவில் பிரதமரை காணொலிஅழைப்பின் மூலம் பங்கேற்க அவர் அழைப்பு விடுத்தார்.
டெல்லியில் பிரதமர் மோடியைச் சந்தித்தற்குப் பின் ஹிமாச்சலப் பிரதேச முதலமைச்சர் ஜெய்ராம் தாக்கூர் கூறியதாவது, 'ஹிமாச்சலப் பிரதேசம் உருவாகி வரும் 2021, ஜனவரி 25ஆம் தேதியுடன் ஐம்பது ஆண்டுகள் ஆகின்றன. இதுதொடர்பான விழாவில் பிரதமர் பங்கேற்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தேன்' என்றார்.
இந்த அழைப்புவிடுக்கும் நிகழ்வில் ஜெய்ராம் தாக்கூருடன், அவரது தலைமை தனிச்செயலர் ஆர்.என்.பட்டாவும் உடனிருந்தார்.
அந்த அழைப்புவிடுக்கும் நிகழ்வில் மூன்று ஆண்டுகளை வெற்றிகரமாக நிகழ்வு செய்தமைக்காக, ஹிமாச்சலப் பிரதேச மாநில முதலமைச்சர் ஜெய்ராம் தாக்கூருக்கு, பிரதமர் மோடி பாராட்டுகளைத் தெரிவித்துக்கொண்டார். மேலும் ஹிமாச்சலப் பிரதேச மாநிலத்தின் பொன் விழா ஆண்டில், தான் நிச்சயம் காணொலி வாயிலாக கலந்துகொள்வதாகவும் மாநிலத்திற்கு வேண்டிய நல்ல திட்டங்களைத்தர தொடர்ந்து உதவுவதாகவும் பிரதமர் மோடி உறுதியளித்தார்.
இதைத் தொடர்ந்து ஜெய்ராம் தாக்கூர், ஹிமாச்சலப் பிரதேச மாநிலத்திற்கு அடல் சுரங்க வழிப்பாதை உட்பட பல்வேறு நலத்திட்டங்களை வழங்கி, செயல்படுத்தியமைக்கு நன்றி தெரிவித்தார்.
இதையும் படிங்க: தமிழ்நாட்டில் தேர்தல் பணிகளை கண்காணிக்கும் தேர்தல் ஆணைய குழு!