இமாச்சலப் பிரதேசத்தில் சுகாதாரத்துறையின் இயக்குநர் அஜய்குமார் குப்தா என்பவர் ஐந்து லட்சம் கையூட்டு பெற்றதாக விஜிலன்ஸ், லஞ்ச ஒழிப்புத்துறையினரால் கைது செய்யப்பட்டார். அது தொடர்பான அவரின் பேசிய செல்போன் ஆடியோ சமூக வலை தளங்களில் வைரலானது.
இந்நிலையில் அம்மாநிலத்தின் முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சரும் நான்கு முறை சட்டப்பேரவை உறுப்பினருமாக இருந்தவருமான ராஜீவ் பிந்தல், 'தனக்கும் இந்த ஊழலுக்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை எனவும்; மேலும் இந்த வழக்கை நடுநிலையாக விசாரிக்க வேண்டும் என்றும்; இமாச்சலப்பிரதேச பாஜக தலைவர் பதவியில் இருந்து விலகுவதாகவும்' பாஜக தலைவர் ஜே.பி. நட்டாவிற்குக் கடிதம் அனுப்பியுள்ளார்.
பிந்தல் இந்த ஊழலில் ஈடுபட்டதாகக் கூறும்; அம்மாநிலத்தின் எதிர்க்கட்சியான காங்கிரஸ், இதனை சிபிஐ விசாரிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளது.
இதையும் படிங்க: நடு இருக்கைகளை காலியாக வைக்க வேண்டும் - ஏர் இந்தியாவுக்கு உத்தரவு