புதுச்சேரி கல்வித்துறை அறிவுறுத்தலின்படி மேல்நிலைப்பள்ளி மாணவிகளுக்கான உயர் கல்வி வழிகாட்டுதல் மற்றும் ஊக்குவித்தல் நிகழ்ச்சி அனைத்து பள்ளிகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக புதுச்சேரி திருவள்ளுவர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் மாணவர்களுக்கான உயர் கல்வி வழிகாட்டுதல் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் கல்வித்துறை இயக்குநர் ருத்ரா கவுடு சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு உயர் கல்வி குறித்து கருத்துரை நிகழ்த்தினார். இதனைத்தொடர்ந்து இப்பள்ளியில் பயின்ற முன்னாள் மாணவிகள் மருத்துவம், செவிலியர், பட்டய கணக்காளர் போன்ற பாடப்பிரிவுகளில் சேர்ந்து சாதனை படைத்து வருகின்றனர். அவர்களும் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு மாணவிகளுடன் கலந்துரையாடல் நிகழ்த்தினர்.
இதன்மூலம் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு எழுத உள்ள மாணவிகளுக்கு உயர் கல்வி குறித்த விழிப்புணர்வு இந்த நிகழ்ச்சி மூலம் ஏற்படுத்தப்பட்டது.
இதையும் படிங்க: கல்லூரியில் குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரத்தை தொடங்கி வைத்த மாவட்ட ஆட்சியர்!