மகாராஷ்டிரா தேசிய நெடுஞ்சாலைகள் மறுஆய்வு தொடர்பான உயர்மட்டக் கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், மாநிலத்தில் மேற்கொள்ளப்பட்டுவரும் தேசிய நெடுஞ்சாலைப் பணிகளில் எதிர்கொள்ளும் சிக்கல்களுக்குத் தீர்வுகாண மத்திய, மாநில அரசின் அலுவலர்கள் குழுவை அமைக்க முடிவுசெய்யப்பட்டது.
தெற்கு மும்பையில் உள்ள சஹ்யாத்ரி விருந்தினர் மாளிகையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் முதலமைச்சர் உத்தவ் தாக்கரே, மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி, மாநில துணை முதலமைச்சர் அஜித் பவார், பொதுப்பணித் துறை அமைச்சர் அசோக் சவான், தொழில் துறை அமைச்சர் சுபாஷ் தேசாய் ஆகியோர் கலந்துகொண்டனர்.
இதற்கிடையில் திட்டங்களை விரைவாக நிறைவேற்றுவதற்காக மத்திய அரசு ரூ.30,000 கோடி நிதியை வழங்க வேண்டும் எனச் சவான் கோரிக்கைவைத்தார்.
இதையும் படிங்க: ரஜினி அரசியல் வருகையை வைத்து ஊடகங்களை கலாய்த்த கே.எஸ். அழகிரி!