"தமிழ் பிராமணர்களின் உலக மாநாடு" கேரள மாநிலம் கொச்சியில் ஜூலை 19ஆம் தேதி முதல் 21ஆம் தேதி வரை நடைபெற்றது. இந்த மாநாட்டில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி அனிதா சுமந்த் மற்றும் கேரள உயர்நீதிமன்ற நீதிபதி சிதம்பரேஷ் ஆகியோர் கலந்துகொண்டு உரையாற்றினர்.
சமீபத்தில் வெளியான பாரத ஸ்டேட் பேங்க் தேர்வில் உயர்சாதி ஏழைகளுக்கான (பொருளாதார ரீதியில் பின்தங்கிய முன்னேறிய வகுப்பினர்) கட் ஆஃப், மிகவும் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட பிரிவினரை விட குறைவாக இருந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்நிலையில் அந்த மாநாட்டில் பேசிய கேரள உயர்நீதிமன்ற நீதிபதி சிதம்பரேஷ், 'பிராமணர்கள் இரண்டு முறை பிறப்பவர்கள். அவர்கள் எப்போதும் தலைமை பொறுப்பில்தான் இருக்க வேண்டும். மேலும், சாதிவாரி இட ஒதுக்கீட்டு(?) முறையை ஒழிப்பதற்குப் போராட அனைவரும் முன்வர வேண்டும் என்று கூறியுள்ளார்.
ஒருபுறம் இட ஒதுக்கீடு முறையால் திறமையற்றவர்கள் உள்ளே நுழைவதாகக் கூவிக்கொண்டே மறுபுறம் சுய சாதி நலனுக்காக ஒரு நீதிபதியே பேசியிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.