ஜார்க்கண்ட் மாநிலத்தின் 81 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு ஐந்து கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெற்றது. இதன் தேர்தல் முடிவுகள் நேற்று வெளியானது. தொடக்கத்தில், ஆளும் பாஜகவுக்கும் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா - காங்கிரஸ் கூட்டணிக்கும் இடையே கடும் போட்டி நிலவிவந்தது.
ஆனால், இறுதியில் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா - காங்கிரஸ் கூட்டணி 47 தொகுதிகளைக் கைப்பற்றியது. ஆட்சி அமைப்பதற்கு 41 தொகுதிகளே போதுமான நிலையில், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சாவின் ஹேமந்த் சோரன் முதலமைச்சராக பதிவியேற்கவுள்ளார்.
ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியின் நிறுவனரும் ஜார்க்கண்ட் மாநிலத்தின் முதலமைச்சராக மூன்று முறை இருந்தவருமான சிபு சோரனின் மகன்தான் ஹேமந்த் சோரன். இவரும் ஜார்க்கண்ட் மாநிலத்தின் முதலமைச்சராக இருந்துள்ளார். 2014ஆம் ஆண்டு நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக வெற்றிபெற்றதைத் தொடர்ந்து, இவர் முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு 28 நாட்களில் ஜார்க்கண்ட் மாநிலம் முழுவதும் பயணம் செய்து 165 பேரணிகளில் கலந்துகொண்டார்.
இளம் வயதிலேயே முதலமைச்சர் பதவியை ஏற்ற ஹேமந்த் சோரன் டிசம்பர் 26ஆம் தேதி மீண்டும் முதலமைச்சராக பதவி ஏற்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: மோடி கடவுளாக தெரிகிறார் - மத்தியப் பிரதேச முன்னாள் முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகான்