ETV Bharat / bharat

அத்தியாவசிய பொருட்களை வீடுகளுக்கு டெலிவரி செய்ய அவசர தொலைபேசி எண்! - bangalore hotline

கர்நாடக மாநிலத்தில் அத்தியாவசிய பொருட்களை வீடுகளுக்கு டெலிவரி செய்ய அவசர அழைப்பு எண்ணை அம்மாநில அரசு வெளியிட்டுள்ளது. அழைப்புகள் மூலமாகவோ, வாட்ஸ் ஆப் மூலமாகவோ பொருட்களுக்கான பதிவுகளை மேற்கொள்ளலாம் என அரசு அறிவித்துள்ளது.

Karnataka helpline
Karnataka helpline
author img

By

Published : Apr 22, 2020, 11:11 AM IST

பெங்களூரு (கர்நாடகம்): கர்நாடக மாநிலத்தில் அத்தியாவசிய பொருட்களை வீடுகளுக்கு டெலிவரி செய்ய அவசர அழைப்பு எண்ணை அம்மாநில அரசு வெளியிட்டுள்ளது. அழைப்புகள் மூலமாகவோ, வாட்ஸ் ஆப் மூலமாகவோ பொருட்களுக்கான பதிவுகளை மேற்கொள்ளலாம் என அரசு அறிவித்துள்ளது.

கோவிட்-19 தொற்று காலத்தில் பொதுமக்களுக்கு ஏற்படும் சிரமத்தைப் போக்க அரசு இந்த நடவடிக்கை எடுத்துள்ளதாகத் தெரிகிறது. அத்தியாவசிய பொருட்கள் தேவைப்படும் மக்கள் 08061914960 என்ற எண்ணைத் தொடர்புகொண்டு தங்களின் ஆர்டர்களை பதியலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதுமட்டுமல்லாமல், வாட்ஸ் ஆப் மூலமாகவும் குறுந்தகவல் அனுப்பி மக்கள் தங்களின் ஆர்டர்களை பதிவுசெய்து கொள்ள முடியும். அரசு சாராத தனியார் தன்னார்வலர்களை உள்ளடக்கிய 50 பேர் கொண்ட குழு இதனைக் கையாளும் என்று கூறப்பட்டுள்ளது.

கிருஷ்ணகிரி மலை கிராமங்களில் குடிநீர் பஞ்சம்

மேலும், மக்கள் பதிவுசெய்யும் பொருட்களை, டன்சோ, சுவிகி, ராபிடோ, க்லோவர், பிக் பஜார், ஷாடோஃபாக்ஸ், ஃபார்மீசி, ஷாப்-ஜி, ஹவுஸ்ஜாய், வுடான், மெட்லைஃப் ஆகிய டெலிவரி நிறுவனங்கள் வாடிக்கையாளர்களின் வீடுகளுக்குச் சென்று கொடுக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.