கேரளாவில் தென்மேற்குப் பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் ஆங்காங்கே வெள்ளம் ஏற்பட்டு தண்ணீர் ஊருக்குள் புகுந்துவருகிறது. இதனால் இடுக்கி, மலப்புரம், வயநாடு, கோழிக்கோடு உள்ளிட்ட நான்கு மாவட்டங்களில் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
மேலும், கொச்சின் சர்வதேச விமான நிலையத்தில் வெள்ளம் புகுந்துள்ளதால் அடுத்த இரண்டு நாட்களுக்கு விமான சேவை நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.
ஆகஸ்ட் 14ஆம் தேதி வரை கேரளா மாநிலத்தில் பலத்த மழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.