புதுச்சேரி சுகாதாரத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் இன்று செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் கூறுகையில், “புதுச்சேரியில் 32 நபர்களுக்கும், காரைக்காலில் ஏழு நபர்களுக்கும் இன்று கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதில் 306 நபர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். 187 நபர்கள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். அதேபோல், மாநிலத்தில் இதுவரை ஒன்பது நபர்கள் கரோனா தொற்றால் உயிரிழந்துள்ளனர்.
தற்போது புதுச்சேரி மாநிலத்தில் பாதிப்பு எண்ணிக்கை 502 ஆக உயர்ந்துள்ளது. நாள் ஒன்றுக்கு சுமார் 40 பேர் கரோனாவால் பாதிக்கப்படுவதால், கதிர்காமம் அரசு மருத்துவமனையில் வெளிபுற சிகிச்சை நாளை முதல் நிறுத்தப்படவுள்ளது. அங்குள்ள நோயாளிகள் சட்டப்பேரவை அருகில் உள்ள அரசு பொது மருத்துவமனைக்கு மாற்றப்படுவார்கள். நோயாளிகளின் எண்ணிக்கை தொடர்ந்து உயர்வதால் ஒரு வாரத்தில் அரசு மருத்துவமனையில் படுக்கைகள் இருக்காது” என்றார்.
இதையும் படிங்க: வீட்டிலிருந்து பணியாற்றுவதை விரும்புகிறார்களா ஐ.டி நிறுவன பெண்கள்?