இது தொடர்பாக அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது, "புதுச்சேரியில் 79 நபர்களுக்கும், காரைக்காலில் 25 நபர்களுக்கும், ஏனாமில் 8 பேருக்கும் இன்று கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று ஒரே நாளில் 112 பேருக்கு கரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. 553 பேர் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். புதுச்சேரியில் இதுவரை, 584 பேர் குணமடைந்து வீட்டிற்கு திரும்பியுள்ளனர்.
கரோனா பாதிப்பால் 14 பேர் உயிரிழந்தனர். இதுவரை கரோனா பாதிப்பு எண்ணிக்கை ஆயிரத்து 151ஆக உயர்ந்துள்ளது. புதுச்சேரியில் வார விடுமுறை நாளான ஞாயிறு அன்று பொதுமக்கள் வீட்டுடைவிட்டு வெளியே வருவது அதிகரித்துள்ளது. இதனை குறைக்கும் விதமாக, இனி வரும் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் ஊரடங்கு அமல்படுத்த வேண்டுமென முதலமைச்சரிடம் கோரிக்கை வைத்துள்ளேன்" என அவர் தெரிவித்தார்.
இதையும் படிங்க: வதந்திகளை நம்பாதீங்க... மென்சுரல் கப் குறித்து மருத்துவரின் விளக்கம்!