புதுச்சேரியில் கரோனா நோய்தொற்று நாளுக்கு நாள் அதிகரித்துவரும் நிலையில் பொது மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள் கரோனா நோய் அறிகுறி உள்ளதா என்பது குறித்தும் விசாரித்துவருகின்றனர்.
இந்நிலையில், அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் நோயாளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்து நேற்று (ஜூ)லை8) சுகாதாரத்துறை துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ், சுகாதாரத்துறை இயக்குநர் மோகன் குமார் மற்றும் அலுவலர்கள் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டனர்.
மேலும் மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்றுவரும் நோயாளிகளிடம் குறைகளை கேட்டறிந்தார்.
மருத்துவமனையை தூய்மையாக பேணி காக்க வேண்டும் என்றும் மருத்துவமனை ஊழியர்களிடம் அவர் அறிவுறுத்தினார்.