ETV Bharat / bharat

ஏழை, எளிய மக்களுக்கு மருத்துவக் காப்பீட்டுத் திட்டம்!

புதுச்சேரி: வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ளவர்களுக்கு மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தை முதலமைச்சர் நாராயணசாமி தொடங்கி வைத்தார்.

cm narayanaswamy
author img

By

Published : Aug 31, 2019, 1:33 PM IST

மத்திய அரசின் ஆயுஷ்மான் பாரத் மருத்துவக் காப்பீட்டு திட்டம் புதுச்சேரி மாநில சுகாதாரத்துறை சார்பில், புதுச்சேரி அரசு அமல்படுத்தியுள்ளது. இதற்கான தொடக்க நிகழ்ச்சி புதுச்சேரி அரசு மருத்துவமனையில் இன்று நடைபெற்றது. முதலமைச்சர் நாராயணசாமி தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில், மாநில சுகாதாரத் துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் மற்றும் அலுவலர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

மருத்துவக் காப்பீடு திட்டத்தை தொடங்கி நாராயணசாமி

இதில், பயனாளிகளுக்கு மருத்துவக் காப்பீட்டு திட்டம் சான்றிதழ் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் பேசிய நாராயணசாமி, இந்த மருத்துவக் காப்பீடு திட்டம் ரூ. 1.2 கோடி மத்திய அரசின் நிதியில் இருந்தும், ரூ. 80 லட்சம் மாநில அரசின் நிதியிலும் முழுமையாக சேர்க்கப்பட்டு செயல்படுத்தப்படுகிறது. இதனால், புதுச்சேரியில் ஒரு லட்சத்து 3 ஆயிரம் குடும்பங்கள் பயனடைவார்கள்.

ஐந்து லட்சம் வரை மருத்துவக் காப்பீடு பெற வாய்ப்புள்ளது. வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ளவர்களுக்கு செயல்படுத்தப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

Intro:புதுச்சேரியில் வறுமைக்கோட்டின் கீழ் உள்ளவர்களுக்கு மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தை முதல்வர் நாராயணசாமி துவக்கி வைத்தார்

Body:மத்திய அரசின் ஆயுஷ்மான் பாரத் மருத்துவ காப்பீட்டு திட்டம் புதுச்சேரி மாநில சுகாதாரத்துறை சார்பில் புதுச்சேரி அமல்படுத்தப்படுகிறது இதற்கான துவக்க நிகழ்ச்சி புதுச்சேரி அரசு மருத்துவமனையில் இன்று நடைபெற்றது

அம்மாநில முதல்வர் நாராயணசாமி தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில், மாநில சுகாதாரத் துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர் பயனாளிகளுக்கு மருத்துவ காப்பீட்டு திட்டம் சான்றிதழ் வழங்கப்பட்டது

இந்நிகழ்ச்சியில் பேசிய முதல்வர் நாராயணசாமி இந்த ருத்துவ காப்பீடு திட்டம் ரூபாய் 1.2 கோடி மத்திய அரசின் நிதியில்இருந்தும் மாநில அரசின் ரூபாய் 80 லட்சம் நீதியிலும் முழுமையாக சேர்க்கப்பட்டு இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது என்றார் இதனால் புதுச்சேரியில் ஒரு லட்சத்து 3 ஆயிரம் குடும்பங்கள் பயனடைவர் 5 லட்சம் வரை மருத்துவ காப்பீடு பெற வாய்ப்புள்ளது என்று பேசியவர் வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ளவர்களுக்கு செயல்படுத்தப்பட உள்ளது புதுச்சேரியில் அனைத்து மக்களுக்கும் மருத்துவ காப்பீடு திட்டம் படிப்படியாக செயல்படுத்தப்படும் அதற்கான நிதி ஆதாரங்களை மாநில அரசு ஆராய்ந்து கொண்டிருக்கிறது .

பிரதம மந்திரி மருத்துவ காப்பீட்டு திட்டம் அதனுடன் முதல்-மந்திரி காப்பீட்டு திட்டம் இணைந்து செயல்படுத்த வேண்டும் என்பது அரசின் எண்ணம் இது விரைவில் நிறைவேற்றப்படும் என்றார்

Conclusion:புதுச்சேரியில் வறுமைக்கோட்டின் கீழ் உள்ளவர்களுக்கு மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தை முதல்வர் நாராயணசாமி துவக்கி வைத்தார்
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.