பட்டாசு வெடிப்பதால் காற்று மாசு ஏற்பட்டு கரோனா தொற்று பரவும் அபாயம் உள்ளதாக பல்வேறு மாநிலங்களில் பட்டாசு வெடிக்க தடை விதிக்கப்பட்டிருந்தது. அந்த வகையில், ஹரியானா மாநிலத்தில் காற்று மாசு உயர்ந்து வருவதாலும், பட்டாசு சப்தம் மற்றும் புகை காரணமாக கரோனா நோயாளிகளுக்கு மேலும் பிரச்னைகள் அதிகரிக்கும் என்பதையும் சுட்டிக்காட்டி பட்டாசு வெடிக்க முழு தடை இரண்டு நாள்களுக்கு முன்பு விதிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் இன்று, தீபாவளிக்கு பட்டாசு வெடிக்க ஹரியானா முதலமைச்சர் மனோகர் லால் கட்டார் அனுமதி வழங்கியுள்ளார். அவர் கூறியதாவது, "தீபாவளியன்று இரவு 8 மணி முதல் 10 மணி வரை மட்டுமே பட்டாசு வெடிக்க அனுமதிக்கப்படும்" எனத் தெரிவித்தார்.
இருப்பினும், ராஜஸ்தான், ஒடிசா, டெல்லி, மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் பட்டாசு வெடிக்க அம்மாநில அரசுகள் விதித்த தடை அமலில்தான் உள்ளது.