ஹரியானா மாநில பாஜக நிர்வாகிகள் கூட்டம் ஹரியானா பவனில் நடந்தது. கூட்டத்தில் கர்னால் தொகுதி பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் சஞ்சய் பட்டியா கலந்துகொண்டார். இந்தக் கூட்டத்தில் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு ஆதரவாக, மாநிலம் முழுக்க விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் பரப்புரை மேற்கொள்ள முடிவெடுக்கப்பட்டது.
இந்த விழிப்புணர்வு பரப்புரை இன்று (ஜன5) தொடங்குகிறது. இந்தப் பரப்புரையை முன்னிட்டு வெவ்வேறு இடங்களில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கூட்டங்கள் நடத்தப்பட உள்ளன. இந்தக் கூட்டத்தில் பாஜக தொண்டர்கள், மாநிலத் தலைவர்கள் கலந்துகொள்ளவுள்ளனர்.
இதுமட்டுமின்றி அறிவுஜீவிகள், விளையாட்டு பிரபலங்கள், நடிகர்கள், முக்கிய திரை பிரபலங்கள் கலந்துகொண்டு தங்களின் கருத்துகளைத் தெரிவிக்கின்றனர். 22 மாவட்டங்களில் நடைபெறவுள்ள இந்த விழிப்புணர்வு பரப்புரையில், சி.ஏ.ஏ. குறித்து குறைந்தபட்சம் 10 லட்சம் குடும்பத்தினருக்கு விழிப்புணர்வுவை ஏற்படுத்த வேண்டும் எனத் திட்டமிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: 'இந்துக்கள் இந்தியாவுக்கு வராமல் இத்தாலிக்கா செல்வார்கள்?'