ETV Bharat / bharat

தமிழ்நாடு பிற மாநிலங்களுக்கு எடுத்துக்காட்டாக விளங்குகிறது - ஹர்ஷ் வர்தன் பாராட்டு

டெல்லி: கரோனா பரிசோதனை முறையில் தமிழ்நாடு பிற மாநிலங்களுக்கு எடுத்துக்காட்டாக இருப்பதாக மத்திய சுகாதார துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் தெரிவித்துள்ளார்.

Harshvardhan
Harshvardhan
author img

By

Published : Oct 29, 2020, 2:22 PM IST

தமிழ்நாட்டில் கரோனா பரவல் குறித்தும் அதைக் கட்டுப்படுத்த மாநில அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்தும் மத்திய சுகாதார துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் இன்று ஆய்வு மேற்கொண்டார். இதில் அவருடன் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் விஜயபாஸ்கரும் பங்கேற்றார்.

இந்தக் கூட்டத்தில் பேசிய ஹர்ஷ் வர்தன், "உலகளவில் கரோனா தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை இந்தியாவில்தான் அதிகம். சுமார் 72 லட்சத்திற்கும் அதிகமானவர்கள் கரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனர்.

இந்தியாவில் கரோனாவில் இருந்து குணமடைந்தோரின் விகிதம் 90.85 விழுக்காடாக உள்ளது. அதேநேரம் தமிழ்நாட்டில் இந்த விகிதம் 94.5 விழுக்காடாக உள்ளது. மேலும், இந்தியாவில் தற்போது கரோனா பரவல் விகிதம் 0.5 விழுக்காடாக உள்ளது. தமிழ்நாட்டில் இந்த கரோனா பரவல் விகிதம் 0.4 விழுக்காடாக உள்ளது.

கரோனா தொற்று இரட்டிப்பாகவும் விகிதம் இந்திய அளவில் 131 நாள்களாகவும் தமிழ்நாட்டில் 217 நாள்களாகவும் உள்ளது. உயிரிழப்புகள் விகிதத்தை தமிழ்நாடு கட்டுக்குள் வைத்துள்ளது.

ஒரு விஷயத்தை நான் குறிப்பிட்டு சொல்ல வேண்டும். இங்கு (தமிழ்நாட்டில்) 98 விழுக்காடு கரோனா பரிசோதனைகளை RT PCR முறையிலேயே மேற்கொள்ளப்படுகிறது. இது மிகவும் பாராட்டத்தக்க ஒரு செயலாகும். இதில் தமிழ்நாடு பிற மாநிலங்களுக்கு முன்னுதாரணமாக இருக்கிறது.

கரோனா குறித்த துல்லியமான முடிவுகளை RT PCR முறையே அளிக்கின்றன. இருப்பினும், இதற்கு அதிக நேரமும் செலவும் ஆகும் என்பதால் மற்ற மாநிலங்கள் பெரும்பாலும் ரேபிட் பரிசோதனைகளையே மேற்கொள்கின்றன. ஆனால், இந்த முறைகளில் கரோனா குறித்து துல்லியமான முடிவுகள் கிடைக்காது" என்றார்.

கரோனா தடுப்புமருந்து குறித்துப் பேசிய அவர், "உலகில் ஒன்பது கரோனா தடுப்புமருந்துகள் மூன்றாம் கட்ட பரிசோதனையில் உள்ளன. அவற்றில் மூன்று தற்போது இந்தியாவில் பரிசோதனையில் உள்ளது.

கரோனா தடுப்புமருந்து பயன்பாட்டிற்கு வந்தவுடன், யாருக்கெல்லாம் இந்தத் தடுப்புமருந்து முதலில் கிடைக்க வேண்டும் என்பது குறித்து நாங்கள் ஒரு பட்டியலை உருவாக்கியுள்ளோம். இதுகுறித்த தகவல்களை மாநில அரசுகளுடன் நாங்கள் பகிர்ந்துள்ளோம்" என்று கூறினார்.

இதையும் படிங்க: கோவிட்-19 நிலவரம்: இந்தியாவில் 80 லட்சத்தை கடந்த கரோனா பாதிப்பு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.