உலகப் புகையிலை இல்லாத தினத்தை முன்னிட்டு, மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன், தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்ததாவது,
"புகையிலைக்கு எதிரானப் போராட்டம் என்பது எனது தனிப்பட்ட போராட்டமாகும். புகையிலைப் பழக்கம் ஒரு தனி மனிதரை மட்டும் இல்லை; அவரின் ஒட்டு மொத்த குடும்பத்தையும் அழித்துவிடும் என்பதை ஈ.என்.டி மருத்துவரான, என் அனுபவத்தில் பார்த்திருக்கிறேன். மேலும் புகையிலைப் பொருட்களை முற்றிலும் தடைசெய்ய வேண்டும்" எனக் குறிப்பிட்டிருந்தார்.
புகையிலை நிறுவனங்கள் ஆண்டிற்குப் புகையிலை விளம்பரத்திற்கு மட்டும் 62.82 கோடி ரூபாய் செலவளிக்கிறார்கள் என்றும்; இதில் அதிகமாக இதுபோன்ற இளைஞர்கள் புகையிலை நிறுவனங்களால் ஈர்க்கப்படுகின்றனர் எனவும்; இதனால் 13 - 15 வயது இளைஞர்கள் பெரும்பாலானோர் பாதிக்கப்படுகின்றனர் எனவும் தெரிகிறது. அவர்களில் 40 மில்லியன் இளைஞர்கள் புகையிலையைப் பயன்படுத்தி வருகின்றனர் என உலக சுகாதார மையத்தியன் தகவல் தெரிவித்துள்ளது.
அதனால், இந்த ஆண்டின் உலக புகையிலை இல்லாத தினத்தில், இளைஞர்களை புகையிலைப் பயன்பாட்டில் இருந்து காப்பாற்றும் வகையில், பரப்புரை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் கரோனா நேரத்தில் புகையிலை உட்கொண்டால், அந்நோய்த் தொற்றில் இருந்து விடுபடலாம் என்று தவறான பரப்புரையை, புகையிலை நிறுவனங்கள் செய்துவருவதாக உலக சுகாதார மையம் குற்றம்சாட்டியுள்ளது.
இதையும் படிங்க: இடுக்கியில் 3 பேருக்குக் கரோனா; பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரம்