ஜம்மு காஷ்மீரிலுள்ள குப்வாரா மாவட்டத்தில் பதுங்கியிருந்த ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த முகம்மது முஸபர் என்ற பயங்கராவதியை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். அவர் தங்கியிருந்த வீட்டின் உரிமையாளரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
பயங்கரவாதியிடம் நடத்திய விசாரணையில் அவர் ஜெய்ஷ்-இ-முகம்மது அமைப்புடன் தொடர்பில் இருந்ததாக ஒப்புக்கொண்டார். அவரிடம் இருந்து பல முக்கிய ஆவணங்களையும் காவல் துறையினர் கைப்பற்றியுள்ளனர். அவர் மீது சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.