ETV Bharat / bharat

கோவிட்-19ஐ எதிர்கொள்ள கிருமிநாசினி சிறந்ததா? தோல் மருத்துவர் பேட்டி! - கரோனா வைரஸ் நோய்

சிறிய குழந்தைகள் மற்றும் சில பெரியவர்களுக்கு கை சுத்திகரிப்பான் பாதுகாப்பற்றது. ஆல்கஹால் அடிப்படையிலான கை சுத்திகரிப்பான்களை விழுங்கினால் அது ஆல்கஹால் விஷத்தை ஏற்படுத்தும். ஆகவே ஆல்கஹால் அடிப்படையிலான கை சுத்திகரிப்பான்களை வழிகாட்டுதலின்படி பயன்படுத்துவது பாதுகாப்பானது.

கரோனா
கரோனா
author img

By

Published : Jul 4, 2020, 9:34 AM IST

Updated : Jul 4, 2020, 2:25 PM IST

தொற்றுநோய்க்கு நன்றி, சுத்திகரிப்பான்களை அடிக்கடி பயன்படுத்துவது தற்போது ஒரு பொதுவான நடைமுறையாகிவிட்டது. நாம் மூன்று மாதங்களுக்கும் மேலாக சுத்திகரிப்பான்களை தீவிரமாக பயன்படுத்தி வருகிறோம்.

சந்தைகளில் ஏற்றம் இருப்பதைக் குறிக்கும் வகையில் சுத்திகரிப்பான்களின் விலைகள் அதிகரித்துள்ளன. பாதுகாப்பாக இருக்க சோப்பு அல்லது சுத்திகரிப்பான் இவற்றில் எதை பயன்படுத்துவது என்று மக்கள் யோசிக்கிறார்கள். இது குறித்து தோல் மருத்துவரான டாக்டர் சைலாஜாவுடன் பேசினோம்.

"கைகளை கழுவுதல்" மற்றும் "கை சுத்திகரிப்பான்களை பயன்படுத்துதல்" ஆகியவற்றிற்கு இரண்டிற்கும் என்ன வித்தியாசம்?

உங்கள் கைகளை பாரம்பரிய வழியில் கழுவுவது என்பது கை சுத்திகரிப்பானைப் பயன்படுத்துவதை விட மிக உயர்ந்தது. சோப் பயன்படுத்தும் போது அழுக்கு, கிருமிகள் மற்றும் எண்ணெயை பிசுக்கு போன்றவற்றை கைகளில் இருந்து நீக்கி உங்களுக்கு சிறந்த, ஒட்டுமொத்த தூய்மை அளிக்கிறது. சில வகையான கிருமிகளை அகற்றுவதில் கை சுத்திகரிப்பான்களைக் காட்டிலும் சோப்பு மற்றும் நீர் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். கை சுத்திகரிப்பானைப் போலன்றி, சோப்பு உங்கள் கைகளில் நீடித்திருக்கும் பூச்சிக்கொல்லிகள் மற்றும் பிற இரசாயன மிச்சங்களையும் அகற்றும்.

கை சுத்திகரிப்பான்களில் முக்கியமாக இரண்டு வகைகள் உண்டு: ஆல்கஹால் அடிப்படையிலான கை சுத்திகரிப்பான்கள் மற்றும் ஆல்கஹால் அல்லாத கை சுத்திகரிப்பான்கள்

ஒரு புதிய ஆய்வின்படி, ஆல்கஹால் அடிப்படையிலான கை சுத்திகரிப்பான்களை உங்கள் கைகளில் பூசும் போது உங்கள் விரல்கள் மேலும் ஈரமாக இருப்பதால் அவை குளிர் மற்றும் காய்ச்சல் கிருமிகளை கொல்லாது..

சுத்திகரிப்பான்களை அதிகமாக பயன்படுத்துவதால் ஏற்படும் விளைவுகள் என்ன?

தோல் எரிச்சல், சிவத்தல், தோல் அழற்சி, வறட்சி, அரிப்பு, விரிசல், இரத்தம் வடிதல் மற்றும் தடிப்புத் தோல் அழற்சி, முன்பு காயமடைந்த பகுதிகளில் எரிவது போன்ற உணர்வு போன்றவை மிகவும் பொதுவான விளைவுகள்.

மற்ற விளைவுகள் என்று பார்த்தால், (பயன்படுத்தும் வழிமுறைகளின்படி பயன்படுத்தாதபோது) ஆல்கஹால் விஷமாக மாறுவது அல்லது தற்செயலான / வேண்டுமென்றே குடிப்பதால் ஏற்படும் பாதிப்புகள் ஆகியவை.

நீண்டகாலம் பயன்படுத்துவதால், சுத்திகரிப்பான்களில் உள்ள மூன்று செயலில் உள்ள மூலப்பொருள்களால் கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு ஏற்படும் விளைவுகள் இன்னும் மதிப்பாய்வில் உள்ளன.

கூடுதலாக, பாக்டீரியா எதிர்ப்பு கை சுத்திகரிப்பான்கள் மற்றும் சோப்புகளைப் பயன்படுத்தும் போது பாக்டீரியாவைக் கொல்லும் இரசாயனங்கள் போன்றவை நோய்எதிர்ப்பு பாக்டீரியாக்களையும் அழிக்கும் என்ற கவலைகள் உள்ளது.

ஆல்கஹால் அடிப்படையிலான கை சுத்திகரிப்பான்களைப் பயன்படுத்துவதால் காலப்போக்கில், உங்கள் கைகளில் உள்ள சருமம் இயற்கையை விட விரைவாக வயதாகிவிடும், ஏனெனில் சருமம் வறண்டு போவதன் காரணமாக சுருக்கங்கள் மற்றும் பிற கறைகளை உருவாக்கும் வாய்ப்புள்ளது.

கை சுத்திகரிப்பாளர்களைப் பயன்படுத்தும் குழந்தைகள் குறித்து உங்கள் கருத்து என்ன?

சிறிய குழந்தைகள் மற்றும் சில பெரியவர்களுக்கு கை சுத்திகரிப்பான் பாதுகாப்பற்றது. ஆல்கஹால் அடிப்படையிலான கை சுத்திகரிப்பான்களை விழுங்கினால் அது ஆல்கஹால் விஷத்தை ஏற்படுத்தும். ஆல்கஹால் அடிப்படையிலான கை சுத்திகரிப்பான்களை வழிகாட்டுதலின்படி பயன்படுத்துவது பாதுகாப்பானது, ஆனால் ஒரு நபர் ஓரிரு இடறுகளுக்கு மேல் விழுங்கினால் அவை ஆல்கஹால் விஷத்தை ஏற்படுத்தும். தீப்பிழம்புக்கு அருகில் அல்லது சமையலறை பகுதியில் தெரியாமலோ / கண்காணிக்காமல் இருந்தாலோ தீ விபத்துக்கள் மற்றும் தீக்காயங்கள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளன.

சுத்திகரிப்பான்களை சரியான முறையில் பயன்படுத்துவது குறித்து பொதுமக்களுக்கு நாம் எவ்வாறு அறிவுறுத்த முடியும்?

சூப்பர் மார்க்கெட்டுகள், நீங்கள் எப்போதாவது செல்லும் இடங்கள் அல்லது குறுகிய நேரத்திற்கு இருப்பது போன்ற தவிர்க்க முடியாத சூழ்நிலைகளில் நீங்கள் சுத்திகரிப்பான்களைப் பயன்படுத்தலாம், நீங்கள் தங்கியிருக்கும் அல்லது நீண்ட நேரம் வேலை செய்யும் இடங்களில் கை கழுவுதல் வசதி நிரந்தரமாக இருக்கும்படி செய்வது எப்போதும் நல்லது.

தயவுசெய்து கை சுத்திகரிப்பான்களை சுடருக்கு அருகில் பயன்படுத்தக்கூடாது என்பதை நினைவில் கொள்ளவும். இது தீ விபத்துக்கள் மற்றும் தீக்காயங்களை ஏற்படுத்தக்கூடும்.

ஒரு நபர் கை சுத்திகரிப்பானை பயன்படுத்திய பிறகு ஒவ்வாமை ஏற்பட்டால், அதற்கு மாற்றாக என்ன செய்வது?

நீங்கள் ஒரு ஆல்கஹால் அடிப்படையிலான கை சுத்திகரிப்பானைப் பயன்படுத்த வேண்டியிருந்தால், கை சுத்திகரிப்பானின் பயன்பாடு முடிந்தவுடன் மாய்ஸ்சரைசருடன் கூடிய கை லோஷனைப் பயன்படுத்துவதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.

ஒரு சுத்திகரிப்பான் இல்லாத போது அல்லது கிடைக்காத நிலையில், ஒருவர் எவ்வாறு சுத்திகரிப்பு செய்து கொள்ள முடியும்?

பொருட்கள் வாங்கும் இடத்தில் கை கழுவும் வசதி இல்லாதிருந்தால் கையுறைகளை அணிந்து பின்னர் அதை அதை அகற்றுவது, புதிய நீர் மற்றும் சோப்புடன் கழுவுதல் போன்றவை எந்த நேரத்திலும் சுத்திகரிப்பான்களை விட மிக சிறந்தது.

வெறும் சோப்பு மற்றும் தண்ணீரில் கைகளை கழுவுவதே நோய்த்தொற்றுகள் பரவாமல் தடுப்பதற்கும், நோய்வாய்ப்படும் அபாயத்தைக் குறைப்பதற்கும் சிறந்த வழி என்று நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் (சி.டி.சி) அறிவுறுத்துகிறது. குறிப்பாக குளியலறைக்கு சென்ற பிறகு, சாப்பிடுவதற்கு முன்பு, இருமல், தும்மல் ஆகியவற்றிற்கு பின்னர் குறைந்தது 20 விநாடிகளுக்கு சோப்பு மற்றும் தண்ணீரில் கைகளை கழுவுவது அவசியம்,. சோப்பு மற்றும் தண்ணீர் கிடைக்கவில்லை என்றால், மக்கள் குறைந்தது 60 விழுக்காடு ஆல்கஹால் கொண்டிருக்கும் ஆல்கஹால் அடிப்படையிலான கை சுத்திகரிப்பான்களை பயன்படுத்தலாம் என்று நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் பரிந்துரைக்கிறது

பல தரை சுத்திகரிப்பான்கள் மற்றும் கிருமிநாசினிகள் போன்றவற்றை சார்ஸ்-கோவ்-2க்கு எதிராக பயன்படுத்தலாம் என்று கூறுகின்றன. இதன் பொருள் என்ன? வைரஸைத் தடுக்க அல்லது சிகிச்சையளிக்க இந்த தயாரிப்புகளை கைகளில் அல்லது உடலில் நான் பயன்படுத்தலாமா?

வீட்டு சுத்திகரிப்பான்களின் பயன்படுத்துதல் குறித்த வழிமுறைகளை எப்போதும் பின்பற்றுங்கள். உங்கள் சருமத்தில் கிருமிநாசினி ஸ்ப்ரேக்கள் அல்லது துடைப்பான்களைப் பயன்படுத்த வேண்டாம், ஏனெனில் அவை தோல் எரிச்சல் மற்றும் கண் எரிச்சலை ஏற்படுத்தக்கூடும்.

கிருமிநாசினி ஸ்ப்ரேக்கள் அல்லது துடைப்பான்கள் மனிதர்கள் அல்லது விலங்குகள் மீது பயன்படுத்தப்படுவதற்காக அல்ல. கிருமிநாசினி ஸ்ப்ரேக்கள் அல்லது துடைப்பான்கள் கடினமான, நுண்துளை இல்லாத மேற்பரப்பில் பயன்படுத்துவதற்கானவை.

இதையும் படிங்க: 'இதுதான் எங்க கரோனா‌ மருந்து' - காட்டு எறும்புகளை அரைத்து சாப்பிடும் பழங்குடியின மக்கள்!

Last Updated : Jul 4, 2020, 2:25 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.