டெல்லி ஹைதர்பூர் பகுதியில் ஏழு வயது சிறுவன் ஒருவன் வெடிகுண்டு போன்ற ஒரு பொருளுடன் விளையாடிக் கொண்டிப்பதாக துணை ஆணையர் அலுவலகத்துக்கு தகவல் வந்தது. இதையடுத்து வெடிகுண்டு நிபுணர்களுடன் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற காவல் துறையினர், அச்சிறுவனிடமிருந்து கையெறி குண்டு ஒன்றை மீட்டனர்.
இதுகுறித்து அப்பகுதியில் ஜவுளி கடை நடத்திவரும் கடைக்காரர் ஒருவரிடம் கேட்போது, "கால்வாய் அருகே அந்தச் சிறுவன் வெடிகுண்டு போன்ற பொருளோடு விளைடிக்கொண்டிருப்பதைக் கண்டேன். திடுக்கிட்ட நான் அந்தச் சிறுவனிடம் சென்று அதனை எங்கு கண்டெடுத்தாய் எனக் கேட்டேன். அதற்கு நண்பர்களுடன் அந்த கால்வாய் அருகே விளையாடிக்ககொண்டிருந்தபோது அதனைக் கண்டெடுத்ததாக கூறினான். இதையடுத்து, காவல் துறையினரிடம் நான் புகார் அளித்தேன்" என்றார்.
டெல்லி வடகிழக்குப் பகுதியில் கடந்த வாரம் ஏற்பட்ட கலவரத்தில் தலைமை காவலர் ராட்டன் லால், உளவுப் பிரிவு அலுவலர் அன்கித் ஷர்மா உள்ளிட்ட 48 பேர் உயிரிழந்தனர். மேலும் 280-க்கும் மேற்பட்டோர் காயங்களுடன் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்பது நினைவுக் கூரத்தக்கது.
இதையும் படிங்க : சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்த மூவருக்கு தூக்கு!