ETV Bharat / bharat

திட்டமிட்ட தேதிக்கு முன்னதாக கிரையோஜெனிக் புரொப்பலண்ட் தொட்டியை டெலிவரி செய்த ஹெச்.ஏ.எல். - இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட்

பெங்களூரு: இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் (ஹெச்.ஏ.எல்.) நிறுவனம் தான் இதுவரை தயாரித்ததிலேயே மிகப்பெரிய கிரையோஜெனிக் புரொப்பலண்ட் தொட்டியை திட்டமிட்ட தேதிக்கு முன்னதாகவே இஸ்ரோவுக்கு வழங்கியுள்ளது.

HAL
HAL
author img

By

Published : Dec 1, 2020, 11:07 AM IST

இந்திய விண்வெளி ஆய்வு மையமான இஸ்ரோ, கடந்த சில ஆண்டுகளாகவே பல செயற்கைக்கோள்களை வெற்றிகரமாக ஏவிவருகிறது. இஸ்ரோவுக்குத் தேவையான பாகங்களை பெங்களூருவில் உள்ள அரசுக்குச் சொந்தமான இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் (ஹெச்.ஏ.எல்.) நிறுவனம் உற்பத்திசெய்கிறது.

இந்நிலையில், ஹெச்.ஏ.எல். நிறுவனம் தான் இதுவரை தயாரித்ததிலேயே மிகப்பெரிய கிரையோஜெனிக் புரொப்பலண்ட் தொட்டியை திட்டமிட்ட தேதிக்கு முன்னதாகவே இஸ்ரோவுக்கு நேற்று வழங்கியது.

சி 32-எல்ஹெச் 2 என்ற பெயரிடப்பட்டுள்ள இந்தத் தொட்டி ஜி.எஸ்.எல்.வி. எம்.கே.- III ராக்கெட் ஏவ தேவையான திறனுடன் அலுமினிய அலாயால் செய்யப்பட்ட ஒரு கிரையோஜெனிக் புரொப்பலண்ட் தொட்டியாகும். நான்கு மீட்டர் விட்டம் கொண்ட இந்தத் தொட்டியில் 5,755 கிலோ ராக்கெட் எரிபொருளை சேமிக்கலாம்.

இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனம் கடந்த 50 ஆண்டுகளாகவே தொடர்ந்து இஸ்ரோவின் விண்வெளித் திட்டங்களில் பணியாற்றியுள்ளது. குறிப்பாக, பி.எஸ்.எல்.வி., ஜி.எஸ்.எல்.வி-எம்.கே.ஐ (GSLV-MkII ) மற்றும் ஜி.எஸ்.எல்.வி-எம்.கே.ஐ.ஐ (GSLV-MkIII) ஆகிய திட்டங்களில் முக்கியக் கட்டமைப்புகள், தொட்டிகள் ஆகியவற்றை ஹெச்.ஏ.எல். மேற்கொண்டது.

விண்வெளி வீரர்கள் வளிமண்டல மறு நுழைவு பரிசோதனை, மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் சோதனை ஆகியவற்றுக்கு தேவையான கருவிகளையும் இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனம் உருவாக்கிவருகிறது.

இதையும் படிங்க: நாடாளுமன்ற நிலைக் குழுவிடமிருந்து 2 நடவடிக்கை அறிக்கைகளைப் பெற்ற வெங்கையா நாயுடு!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.