ஆந்திர மாநிலம் திருப்பதியில் சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்களுக்காக, பல்வேறு வசதிகளை கோயில் நிர்வாகம் செய்துவருகிறது. தற்போது கரோனா தொற்று உலகம் முழுமையாக பரவி வரும் நிலையில், திருப்பதி கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு கிருமி தொற்று பரவாமல் தடுக்கவும், பக்தர்களை கையாளவும் புதிய வகையிலான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
அதன்படி முடி எடுக்கும் நபருக்கும், முடி காணிக்கை செலுத்தும் நபருக்கும் தொற்று பரவாமல் இருக்கு தடுப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதனால் கோயிலில் முடி காணிக்கை செலுத்த வரும் பக்தர்கள் நோய்த் தொற்று அச்சமின்றி அமர்ந்து முடி காணிக்கை செலுத்துகின்றனர்.
இது பசு வதையல்ல... பசு வன்புணர்வு! சிக்கிய நபர்
கோயில் நிர்வாகத்தின் இந்த புதிய முயற்சியை பக்தர்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.