ஆந்திர மாநிலம் குண்டூருக்கு அருகே பிரகாசம் மாவட்டத்தில் உள்ளது ஒங்கோல். அங்கு வசித்து வரும் முனி கிருஷ்ணய்யா என்பவரின் மகன் விஜய். இவருக்கு சமீபத்தில் திருமணமாகியுள்ளது.
இந்நிலையில் நாடு முழுவதும் வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ள நிலையில், ஆந்திர மாநிலத்தில் பல பகுதிகளில் 40 டிகிரி செல்சியஸ் அளவிற்கு வெப்பம் வாட்டி வதைத்து வருகிறது. கடும் வெப்பத்தின் தாக்கம் காரணமாக விஜயின் மாமியார் சில நாட்களாகவே தவித்து வந்துள்ளார்.
இதைக் கவனித்த விஜய், அவருக்கு இன்ப அதிர்ச்சி அளிக்கும் வகையில் மாமியாரின் குடிசை வீட்டில் ஏ.சி மாட்டிக் கொடுத்துள்ளார். குடிசை வீட்டில் திடீரென ஏ.சி பொருத்தப்பட்டதைக் கண்டு அப்பகுதியினர் ஆச்சரியமாகப் பேசி வருகின்றனர். எது எப்படியோ மாமியாருக்கு வசதி செய்து கொடுத்து மனைவியிடம் நன்மதிப்பை சாமர்த்தியமாகப் பெற்றுவிட்டார் விஜய்.