ETV Bharat / bharat

குப்கார் தீர்மானத்துக்கான மக்கள் கூட்டணிக்கு 'அதிகார பசி' - ஸ்மிருதி இரானி - J-K people

ஜம்மு-காஷ்மீர்: குப்கார் தீர்மானத்துக்கான மக்கள் கூட்டணிக்கு காஷ்மீர் மக்களின் நலனில் அக்கரையில்லை என்றும், அவர்களுக்கு அதிகார பசி மட்டுமே உள்ளது என்றும் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி விமர்சித்துள்ளார்.

அமைச்சர் ஸ்மிருதி ராணி
அமைச்சர் ஸ்மிருதி ராணி
author img

By

Published : Dec 14, 2020, 9:02 AM IST

ஜம்மு-காஷ்மீரில் மாவட்ட வளர்ச்சி கவுன்சில் தேர்தல் எட்டு கட்டங்களாக நடைபெற்றுவருகின்றன. இந்தத் தேர்தலின் ஆறாம் கட்ட வாக்குப்பதிவு நேற்று நடைபெற்றது. ஜம்முவில் 17 தொகுதிகள், காஷ்மீர் பிராந்தியத்தில் 14 தொகுதிகள் என மொத்தம் 31 மாவட்ட வளர்ச்சிக் கவுன்சில் தொகுதிகளுக்கு நேற்று தேர்தல் நடைபெறுகிறது.

ஜம்மு-காஷ்மீருக்கு வழங்கப்பட்டுவந்த சிறப்புத் தகுதியை ரத்துசெய்த பிறகு, அம்மாநிலத்தில் நடைபெறும் இந்த முதல் தேர்தலில், பாஜக, காங்கிரஸ், ஆம் ஆத்மி, குப்கார் தீர்மானத்துக்கான மக்கள் கூட்டணி உள்ளிட்ட கட்சிகள் களம் காண்கின்றன.

அமைச்சர் ஸ்மிருதி ராணி
அமைச்சர் ஸ்மிருதி இரானி

ஜம்மு காஷ்மீர் மாநிலத்திடமிருந்து பறிக்கப்பட்ட சிறப்புத் தகுதியான 370ஆவது பிரிவை மீண்டும் கொண்டுவரும் நோக்கில் குப்கார் தீர்மானத்துக்கான மக்கள் கூட்டணி அமைந்துள்ளது. இந்தக் கூட்டணியில் ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் பிரதான கட்சியான தேசிய மாநாட்டுக் கட்சி, மக்கள் ஜனநாயக கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்டவை இடம்பெற்றுள்ளன.

இந்நிலையில், பாஜகவின் முக்கியத் தலைவரும், மத்திய அமைச்சருமான ஸ்மிருதி இரானி ஜம்மு-காஷ்மீர் மாவட்ட வளர்ச்சி கவுன்சிலுக்கான தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டார்.

அப்போது பேசிய அவர், "குப்கார் தீர்மானத்துக்கான மக்கள் கூட்டணிக்கு காஷ்மீர் மக்களின் நலனில் அக்கரையில்லை. அவர்களுக்கு அதிகார பசி மட்டுமே உள்ளது. அவர்கள் தேர்தல் நேரத்தில் மக்களை ஏமாற்றிவருகின்றனர். ஒருபோதும் அவர்கள் மக்கள் நலன்பெறும் வகையில் உணவு, சுகாதாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை மாநிலத்தில் ஏற்படுத்துவற்கு உழைக்க மாட்டார்கள்" என விமர்சித்தார்.

மாவட்ட வளர்ச்சி கவுன்சிலுக்கான ஏழு மற்றும் எட்டாம் கட்ட தேர்தல் வாக்குப்பதிவு முறையே டிசம்பர் 16 மற்றும் 19ஆம் தேதிகளில் நடைபெறுகிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை டிசம்பர் 22ஆம் நடைபெற்று அன்றைய தேதியே தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.

இதையும் படிங்க: மூளையில் அறுவை சிகிச்சை செய்தபோது பியானோ வாசித்த சிறுமி!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.