காஷ்மீர் புட்கம் மாவட்டத்தில் உள்ள தூனிவாராவில் பயங்கரவாதிகள் பதுங்கிருப்பதாகப் பாதுகாப்புப் படையினக்குத் தகவல் கிடைத்தது. இதையடுத்து, களத்தில் இறங்கிய படையினர், தூனிவாராவில் தீவிர சோதனை நடத்தினர்.
அப்போது, வீட்டில் மறைந்திருந்த பயங்கரவாதிகள் திடீரென்று பாதுகாப்புப் படை வீரர்களை நோக்கித் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். முதற்கட்ட தகவலின்படி, பயங்கரவாதிகளுக்கும், பாதுகாப்புப் படையினருக்கும் தொடர்ந்து துப்பாக்கிச் சூடு நடைபெற்றுவருகிறது. இதுவரை உயிர்ச்சேதம் எதுவும் ஏற்படவில்லை எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதையும் படிங்க: கொரோனா வைரஸ்: ஊழியர்களை ஊதியம் இல்லாத விடுப்பு எடுத்துக் கொள்ள அறிவுறுத்தும் எமிரேட்!