ETV Bharat / bharat

கியூஆர் கோடு, வெப் போர்ட்டல் டெக்னாலஜி... அசத்தும் அரசுப்பள்ளி! - வெப் போர்ட்டல் டெக்னாலஜி

பாவ்நகர்: டிஜிட்டல் இந்தியா என்பதற்கு ஏற்ப மாணவர்களின் வருகைப் பதிவு முதல், தேர்வு எழுதும் முறை வரை அனைத்தையும் டிஜிட்டல் வழியில் கல்வி கற்றுக்கொடுத்து குஜராத்தில் உள்ள டெக் சாவி மகளிர் அரசுப்பள்ளி அசத்தி வருகிறது.

gujarats-tech-savvy-school-with-qr-code-attendance-and-online-education

author img

By

Published : Mar 19, 2020, 10:30 AM IST

இந்தியாவில் அரசுப்பள்ளிகள் என்றால் சில அடிப்படை வசதிகள் மட்டுமே செய்யப்பட்ட பழைய கட்டடங்கள் தான் அனைவருக்கும் நினைவிற்கு வரும். ஆனால் அதே அரசுப்பள்ளிதான் கியூஆர் கோடு (QR Code) பொருத்தப்பட்ட அடையாள அட்டை, டிஜிட்டல் முறையில் கல்வி, வெப் போர்ட்டல் டெக்னாலஜி என இந்தியாவின் மாடல் டிஜிட்டல் பள்ளியாக அசத்தி வருகிறது குஜராத்தின் கர்தாஜ் கிராமத்தில் உள்ள டெக் சாவி (Tech - Savvy) மகளிர் அரசுப்பள்ளி.

இந்த பள்ளியில் ஆசிரியர் - பெற்றோர் இடையே சுமூகமான உறவை ஏற்படுத்தும் வகையிலும், குழந்தைகள் சரியான நேரத்தில் பள்ளி சென்றுவிட்டார்களா என்று கண்டறிவதற்கும், தேர்வு பயத்தைப் போக்குவதற்கும் பல திட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. அது, மாணவர்கள் தங்களது அடையாள அட்டையை கியூஆர் கோடுகள் மூலம் வருகையைப் பதிவு செய்ததும் பெற்றோருக்கு குறுஞ்செய்தி சென்றுவிடுகிறது. அதேபோல் மாணவர்கள் பள்ளி வளாகத்தில் வகுப்புகளில் பங்கேற்றுள்ளார்களா என்பதை மொபைல் செயலி மூலம் பெற்றோர்கள் பார்ப்பதற்கு வசதி செய்யப்பட்டுள்ளது.

சில நேரங்களில் மாணவர்கள் காய்ச்சல் காரணமாக பள்ளிக்கு வருவது இயலாமல் போகும். அதனை சரி செய்திட, வீட்டிலிருந்தபடியே மொபைல் செயலி மூலம் அன்றைய பாடத்தினை தரவிறக்கும் செய்ய வசதி செய்யப்பட்டுள்ளது. அதேபோல் தேர்வு பயத்தினைப் போக்குவதற்கு வீட்டிலிருந்தபடியே செயலியின் மூலம் தேர்வு எழுதும் முறை கடைப்பிடிக்கப்படுகிறது.

மாணவர்கள் பிறப்பு சான்றிதழ், மருத்துவ சான்றிதழ் ஆகியவை பெறுவதற்கு டிஜிட்டல் முறையே பின்பற்றப்படுவதாகக் கூறப்பட்டுள்ளது. டிஜிட்டல் இந்தியா என்ற பெயருக்கு ஏற்ப, இந்தியாவில் செயல்படும் ஒரே அரசுப்பள்ளி இதுமட்டுமே.

இதையும் படிங்க: ஆசிரியைக்கு மாணவியின் உருக்கமான கடிதம்: நிறைவேறிய கோரிக்கை

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.