குஜராத் மாநில தேர்தல் ஆணையம் 10 நகராட்சிகளில் 15 இடங்களுக்கு இடைத்தேர்தலை அறிவித்தது. இதில், ஆறு இடங்களில் வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்ந்தேடுக்கப்பட்டதில் பாஜக 5 இடங்களிலும், சுயட்சை ஒரு இடத்திலும் வெற்றிபெற்றார். மீதமுள்ள ஒன்பது இடங்களுக்கு ஜூலை 7ஆம் தேதி வாக்குப்பதிவு நடத்தப்பட்டு, அதற்கான வாக்கு எண்ணிக்கை இன்று நடந்தது.
இதில், பகசாரா நகராட்சியில் உள்ள நான்கு இடங்கள் உள்ளிட்ட மொத்தம் ஆறு இடங்களை பாஜக கைப்பற்றியது. விராகம், கனாஜாரி ஆகிய நகராட்சிகளில் உள்ள மூன்று இடங்களில் காங்கிரஸ் வெற்றிபெற்றது. மக்களவைத் தேர்தலில் குஜராத்தில் உள்ள 26 தொகுதிகளையும் பாஜக கைப்பற்றிய நிலையில், நகராட்சி தேர்தலில் 15 இடங்களில் 11 இடங்களில் பாஜக வெற்றி பெற்றதன் மூலம் மக்கள் ஆதரவு தங்களுக்கே இருப்பதாக பாஜகவினர் கூறிவருகின்றனர்.