கரோனா வைரஸ் நோய் இந்தியாவில் வேகமாக பரவிவருகிறது. இதுவரை 27,892 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 872 உயிரிழப்பு சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. இதனிடையே, குஜராத் மாநிலத்தின் மூத்த காங்கிரஸ் தலைவர் பத்ருதீன் ஷேக் கரோனா வைரஸ் நோய் பாதிப்பு காரணமாக உயிரிழந்துள்ளார்.
பத்ருதீன் ஷேக்குக்கு கரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது ஏப்ரல் 15ஆம் தேதி உறுதியானதைத் தொடர்ந்து, அந்த நாளே அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதற்கு காங்கிரஸ் கட்சியின் தேசிய செய்தித் தொடர்பாளர் சக்திசின் கோஹில் இரங்கல் தெரிவித்துள்ளார்.
-
I am at loss of words. Badrubhai, as we called him was a stellar of strength and patience. A senior leader of our @INCGujarat family,I knew him since40 years when he was with YouthCongress.He was relentlessly working with poor people & was infected with #Covid_19. #RIP my friend. https://t.co/sjkGrBnbqq
— Shaktisinh Gohil (@shaktisinhgohil) April 26, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
">I am at loss of words. Badrubhai, as we called him was a stellar of strength and patience. A senior leader of our @INCGujarat family,I knew him since40 years when he was with YouthCongress.He was relentlessly working with poor people & was infected with #Covid_19. #RIP my friend. https://t.co/sjkGrBnbqq
— Shaktisinh Gohil (@shaktisinhgohil) April 26, 2020I am at loss of words. Badrubhai, as we called him was a stellar of strength and patience. A senior leader of our @INCGujarat family,I knew him since40 years when he was with YouthCongress.He was relentlessly working with poor people & was infected with #Covid_19. #RIP my friend. https://t.co/sjkGrBnbqq
— Shaktisinh Gohil (@shaktisinhgohil) April 26, 2020
இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "பேசுவதற்கு வார்த்தைகளை இழந்துள்ளேன். பொறுமைக்கும் வலிமைக்கும் பெயர் போன அவரை பத்ருதீன் என அனைவரும் அழைப்போம். குஜராத் மாநிலத்தின் மூத்த காங்கிரஸ் தலைவரான அவரை 40 ஆண்டுகளாக தெரியும். அவருக்கு ஆழ்ந்த இரங்கல்" என பதிவிட்டுள்ளார்.
இதையும் படிங்க: ஊரடங்கு நீட்டிப்பா...? தொடங்கியது ஆலோசனை