இந்தியாவில் கரோனா பாதிப்பு தடுப்பு நடவடிக்கைகள், அதை எதிர்கொள்வதற்கான வழிமுறைகளை ஐ.சி.எம்.ஆர் எனப்படும் அரசின் கீழ் இயங்கும் மருத்துவ ஆணையம் வரையறை செய்துவருகிறது.
தற்போது நாடு முழுவதும் உள்ள லட்சக்கணக்கான புலம்பெயர் தொழிலாளர்கள் தங்களது சொந்த மாநிலங்களுக்கு திரும்பி செல்லும் நிலையில் அவர்களை முறையாக கண்காணித்து பரிசோதனை செய்து கரோனா பரவலைத் தடுக்க முக்கிய செயல்திட்டத்தை ஐ.சி.எம்.ஆர் தற்போது வரையறை செய்துள்ளது.
பல்லாயிரக்கணக்கானோருக்கு சோதனை செய்ய குழு பரிசோதனை திட்டத்தை ஐ.சி.எம்.ஆர் பரிந்துரை செய்துள்ளது. அதன்படி, முதல்கட்டமாக 25 பேரின் பரிசோதனை மாதிரிகளை எடுத்துகொண்டு ஒரே நேரத்தில் பரிசோதனை செய்யவேண்டும். அந்த மாதிரியில் கரோனா வைரஸ் இல்லை என்றபட்சத்தில், அவர்கள் 25 பேரும் நோய் தொற்று அற்றவர்களாக அறிவிக்கப்படுவார்கள்.
மாறாக மாதிரியில் கரோனா வைரஸ் தொற்று உறுதியாகும்பட்சத்தில் 25 பேருக்கும் பிரத்யேக பரிசோதனை மேற்கொள்ள வேண்டும். இந்த செயல்திட்டத்தின் மூலம் ஒரே சமயத்தில் அதிகளவிலான நபர்களுக்கு பரிசோதனைகளை மேற்கொள்ளலாம்.
இந்த செயல் திட்டத்தை வெளிநாட்டிலிருந்து இந்தியா கொண்டுவரப்பட்டவர்களுக்கும் மேற்கொள்ளலாம் என ஐ.சி.எம்.ஆர் தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: நாடு திரும்பியோர் மட்டுமே உள்நாட்டு விமானங்களில் பயணம் செய்ய அனுமதி!