ETV Bharat / bharat

விளையாட்டில் முடிந்த விபரீதம் - தாத்தா வீட்டில் பேரனுக்கு நடந்தது என்ன?

author img

By

Published : Jun 1, 2020, 6:57 PM IST

ஜம்மு: விளையாட்டாக தாத்தாவின் துப்பாக்கியைப் பயன்படுத்தியபோது, அதில் இருக்கும் தோட்டா வெளியேறி, சம்பவயிடத்திலேயே சிறுவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

riffle
riffle

ஜம்மு-காஷ்மீரில் உள்ள ரியாசி மாவட்டத்தில் துப்பாக்கியின் தோட்டா தாக்கப்பட்டதில், நான்கு வயது சிறுவன் இறந்துள்ளதாக காவல் துறை அறிவித்துள்ளது.

வான்ஷ் (Vansh) (4), மூத்த சகோதரர் ரோஹித் (10) இருவரும் ஞாயிற்றுக்கிழமை அர்னாஸில் உள்ள மஸ்லோட் கிராமத்தில் வசிக்கும் தனது தாத்தா வீட்டிற்கு வந்துள்ளனர். வீட்டிற்கு வந்த சிறிது நேரத்தில், கிராமப் பாதுகாப்புக் குழு (வி.டி.சி) உறுப்பினராக இருக்கும் தாத்தாவின் துப்பாக்கியுடன் சிறுவர்கள் இருவரும் விளையாடத் தொடங்கியுள்ளனர்.

'இது தனக்கு தான் சொந்தம்' என உரிமை கொண்டாட விரும்பி, ஒருவருக்கு ஒருவர் அதனைப் பிடிங்கியுள்ளனர். தற்செயலாக துப்பாக்கியில் இருந்த தோட்டா சிறுவன் வான்ஷ் மீது பாய்ந்துள்ளது.

சிறுவன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளான். இது தொடர்பாக காவல் துறை வழக்குப்பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் துப்பாக்கியை பறிமுதல் செய்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க: 16 துணை மின் நிலையங்களை திறந்துவைத்த முதலமைச்சர்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.