ETV Bharat / bharat

'டெல்லியில் கரோனா வைரஸ் தாக்கம் குறைகிறது' டெல்லி சுகாதார அமைச்சர்

author img

By

Published : Nov 20, 2020, 7:02 PM IST

கரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை குறைந்துள்ளதால், டெல்லியில் கரோனாவின் தாக்கம் குறைந்து வருவது தெளிவாக தெரிகிறது என டெல்லி சுகாதாரத் துறை அமைச்சர் சத்யேந்திர ஜெயின் தெரிவித்துள்ளார்.

gradually-reduction-in-new-cases-positivity-rate-points-at-decreasing-covid-spread-in-delhi-jain

தேசிய தலைநகரில் கரோனா வைரஸ் பாதிப்பு மீண்டும் அதிகரித்தது. நவ.10ஆம் தேதி மட்டும் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 8 ஆயிரத்து 593ஆக இருந்தது.

இந்நிலையில் டெல்லி சுகாதார அமைச்சர் சத்யேந்திர ஜெயின் செய்தியாளர்களிடம் பேசுகையில், '' நவ.7ஆம் கரோனா சோதனை செய்யப்படுபவர்களில் 15 சதவிகிதம் பேருக்கு கரோனா இருந்தது. அது இப்போது 11 சதவிகிதமாக குறைந்துள்ளது. கடைசியாக நவ.10ஆம் தேதி தான் அதிகபட்சமாக கரோனா பாதிப்புகள் உறுதி செய்யப்பட்டது.

கரோனா உறுதி செய்யப்படும் சதவிகிதம் குறைந்து வருகிறது என்பது கரோனாவின் தாக்கம் குறைவதை தெளிவாக காட்டுகிறது. இதனால் டெல்லியில் கரோனா தொற்றின் தாக்கம் குறைக்கப்பட்டுள்ளது.

மக்கள் எங்கு சென்றாலும் முகக்கவசத்தை எப்போதும் அணிய வேண்டும். முகக்கவசம் அணியாதவர்களுக்கு ரூ.2 ஆயிரம் அபராதம் விதிக்கப்படுகிறது. மேலும் தனியார் மருத்துவமனைகளில் உள்ள 80 சதவிகித ஐசியு படுக்கைகளை அரசு சார்பாக முன்பதிவு செய்துள்ளோம்.

ஒவ்வொரு மாவட்டத்திலும் அதிகபட்சமாக கரோனா பரிசோதனை மேற்கொள்ள வசதி செய்யப்பட்டுள்ளது. ஒவ்வொரு நாளுக்கும் டெல்லியில் 27 ஆயிரம் பேருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. அதில் மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவக் கல்வி மாணவர்கள், பயிற்சி மாணவர்கள் அனைவரும் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்'' என்றார்.

இதையும் படிங்க: பிணையில் வெளியானார் கம்ப்யூட்டர் பாபா

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.