ஒடிசா மாநிலத்தில் நடைபெற்ற பாரதிய ஜனதா கட்சி செயற்குழுக் கூட்டத்தில் கலந்துகொண்ட பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா சிறப்புரையற்றினார். அப்போது பேசிய அவர், ”உலகின் பெரும் சக்திகளே கரோனா ஆரம்ப காலத்தில் முடிவெடுக்க முடியாமல் திணறிவந்த நிலையில், பிரதமர் நரேந்திர மோடி தீர்க்கமான முடிவெடுத்து நாடு முழுவதும் பொது முடக்கத்தை அறிவித்தார். இதன் மூலம் லட்சக்கணக்கான மக்களின் உயிர்கள் பாதுகாக்கப்பட்டன.
அதேவேளை, பொது முடக்கத்தால் ஏற்பட்ட பொருளாதார பாதிப்பை எதிர்கொள்ள தற்சார்பு இந்தியா திட்டம், கரீப் கல்யாண் திட்டம் போன்றத் திட்டங்களை மோடி அரசு அறிவித்தது. கரோனா தடுப்பு நடவடிக்கையில் இந்திய அரசின் செயல்பாடுகளை ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளரே பாராட்டியுள்ளார்.
கரோனாவால் மற்ற கட்சிகள் முடங்கியுள்ள நிலையில், பாஜக மட்டும்தான் களத்திலும் காணொலி வாயிலாகவும் மக்களுக்கு சேவையாற்றி வருகிறது.
கரோனாவால் நாட்டிற்கு வந்த சோதனையையும் மத்திய அரசு சாதனையாக மாற்றி வருகிறது” என பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: கரோனாவால் தாமதமாகும் புல்லட் ரயில் திட்டம்?