வெங்காய விலை சமீப ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அதிகரித்துள்ளது. தேசிய தலைநகர் பகுதியில் ஒரு கிலோ வெங்காயம் 100 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. இந்த விலைவாசி உயர்வால் பொதுமக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். கர்நாடகா, மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் பெய்த கனமழை காரணமாக உள்நாட்டு உற்பத்தி 30 முதல் 40 சதவிகிதம் வரை குறைந்துள்ளதே இந்த பற்றாக்குறைக்குக் காரணம்.
இதனிடையே மத்திய உணவுத்துறை அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வான் தனது ட்விட்டர் பக்கத்தில், "வெங்காய விலையைக் கட்டுக்குள் வைக்க ஒரு லட்சம் டன் வெங்காயத்தை இறக்குமதி செய்ய மத்திய அரசு முடிவெடுத்துள்ளது" என்று பதிவிட்டுள்ளார்.
மத்திய அரசின் எம்.எம்.டி.சி (MMTC) என்ற பொதுத்துறை நிறுவனம் இந்த வெங்காய இறக்குமதி மற்றும் விநியோக நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளது. இந்த முடிவானது சனிக்கிழமை நடைபெற்ற செயலர்கள் கூட்டத்தில் எடுக்கப்பட்டது.
-
सरकार ने प्याज की कीमतों को नियंत्रित करने के लिए 1 लाख टन प्याज के आयात का फैसला लिया है। MMTC 15 नवंबर से 15 दिसंबर के बीच आयातित प्याज देश में वितरण के लिए उपलब्ध कराएगा और NAFED को देश के हर हिस्से में प्याज का वितरण करने की जिम्मेदारी सौंपी गई है। #Onion @PMOIndia pic.twitter.com/O8KuaaO2la
— Ram Vilas Paswan (@irvpaswan) November 9, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data="
">सरकार ने प्याज की कीमतों को नियंत्रित करने के लिए 1 लाख टन प्याज के आयात का फैसला लिया है। MMTC 15 नवंबर से 15 दिसंबर के बीच आयातित प्याज देश में वितरण के लिए उपलब्ध कराएगा और NAFED को देश के हर हिस्से में प्याज का वितरण करने की जिम्मेदारी सौंपी गई है। #Onion @PMOIndia pic.twitter.com/O8KuaaO2la
— Ram Vilas Paswan (@irvpaswan) November 9, 2019सरकार ने प्याज की कीमतों को नियंत्रित करने के लिए 1 लाख टन प्याज के आयात का फैसला लिया है। MMTC 15 नवंबर से 15 दिसंबर के बीच आयातित प्याज देश में वितरण के लिए उपलब्ध कराएगा और NAFED को देश के हर हिस्से में प्याज का वितरण करने की जिम्मेदारी सौंपी गई है। #Onion @PMOIndia pic.twitter.com/O8KuaaO2la
— Ram Vilas Paswan (@irvpaswan) November 9, 2019
முதலில் உடனடியாக இரண்டாயிரம் டன் வெங்காயம் இறக்குமதி செய்யப்படும் என்றும் பின்னர் டிசம்பர் இறுதியில் இரண்டாம் இறக்குமதி இருக்கும் என்று எம்.எம்.டி.சி நிறுவனம் அறிவித்துள்ளது. இறக்குமதி செய்யப்பட்ட வெங்காயம் நவம்பர் 15ஆம் தேதி முதல் டிசம்பர் 15ஆம் தேதி வரை உள்ளூர் சந்தையில் விற்பனை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
வெங்காய இறக்குமதி செய்ய ஏதுவாக எகிப்து, ஈராக், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யும் விதிகள் வரும் 30ஆம் தேதி வரை தளர்த்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: பசுமை கடைகளில் குறைந்த விலையில் வெங்காயம் விற்பனை - அமைச்சகர்கள் தகவல்