நிதி நெருக்கடியில் சிக்கியுள்ள யெஸ் வங்கியின் 49 விழுக்காடு பங்குகளை வாங்க எஸ்பிஐ, எல்ஐசி ஆகிய நிறுவனங்கள் முடிவெடுத்தது. இந்நிலையில், மத்திய சட்டத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். இதுகுறித்து அவர் கூறுகையில், "அரசு கடும் நடவடிக்கை எடுத்துள்ளது. எஸ்பிஐ சரியான திசையில் சென்று கொண்டிருக்கிறது.
பிரதமராக மன்மோகன் சிங்கும், நிதியமைச்சராக சிதம்பரமும் இருந்தபோது, நஷ்டத்தில் இயங்கிய நிறுவனங்களுக்கு யெஸ் வங்கி கடன் கொடுத்ததாகவும், இந்த நிலை உருவாவதற்கு அவர்கள் எடுத்து முடிவே காரணம் எனவும் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார். மூலதனத்தை உயர்த்த வங்கியால் இயலவில்லை. இதனால், யெஸ் வங்கியின் மீது கடும் கட்டுப்பாடுகளை ரிசர்வ் வங்கி விதித்தது" என்றார்.
பெண்கள் தினம் குறித்து பேசிய அவர், "பாதுகாப்பு, தகவல் தொழில்நுட்பம், அறிவியல் உள்ளிட்ட துறைகளில் பெண்கள் பல சாதனைகள் படைத்துவருவது பெருமை அளிக்கிறது. தூய்மை இந்தியா திட்டத்திற்காக பல பெண்கள் பங்காற்றியுள்ளனர். முதல் ஐந்தரை ஆண்டுகளில் 11 கோடி கழிவறைகள் கட்டப்பட்டன. அவர்களின் நம்பிக்கைக்கு என்னுடைய வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்" என்றார்.
இதையும் படிங்க: யெஸ் வங்கி நிறுவனர் ரானா கப்பூர் கைது