ETV Bharat / bharat

ஜிஎஸ்டி வரம்பிற்குள் பெட்ரோல், டீசல் விலை - காங்கிரஸ் வலியுறுத்தல்

டெல்லி: பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை நிர்ணயத்தை ஜிஎஸ்டிக்குள் கொண்டுவரவேண்டும் என காங்கிரஸ் கட்சி வலியுறுத்தியுள்ளது.

govt-must-bring-fuel-prices-under-gst-withdraw-hike-in-excise-duty-congress

author img

By

Published : Jun 15, 2020, 10:43 AM IST

உலகளவில் கச்சா எண்ணெய் விலை வரலாறு காணாத அளவு சரிந்துவரும் சூழலிலும் மத்திய அரசு பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு உள்ளிட்டவைகளின் கலால் வரிகளை தொடர்ந்து அதிகரித்துவருகிறது.

முன்னதாக, கரோனா வைரஸ் பாதிப்பினால் வாழ்வாதாரம் இழந்து தவிக்கும் மக்கள் அத்தியாவசிய தேவைகளான பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலையில் அதிகளவு வரிகளை திணிப்பதால் மேலும் பாதிப்படைந்துவருகின்றனர்.

மக்கள் மீது சுமத்தப்படும் இந்த வரிகளை கட்டுப்படுத்த பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயுக்களின் விலை நிர்ணயம் ஜிஎஸ்டி வரம்பிற்குள் கொண்டுவரவேண்டும். 2014ஆம் ஆண்டிற்கு முன் விதிக்கப்பட்டிருந்த பெட்ரோல், டீசல் விலைகளைப்போல மீண்டும் குறைக்கப்படவேண்டும் என காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ரன்தீப் சுர்ஜேவாலா தெரிவித்துள்ளார்.

  • Petrol-Diesel prices should be brought under GST

    The current crude oil price is about US $40, similar to August 2004 level. Yet consumers are paying a heavier bill

    Modi-Shah govt must immediately rollback Excise Duty hike of ₹23.78 on petrol & ₹28.37 on Diesel

    Our Statement: pic.twitter.com/uywxrhEQTQ

    — Randeep Singh Surjewala (@rssurjewala) June 14, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

இது குறித்து அவர் ட்விட்டரில், “கடந்த ஆறு ஆண்டுகளில், மத்திய அரசு கூடுதலாக பெட்ரோலுக்கு 258 விழுக்காடும், டீசலுக்கு 820 விழுக்காடும் கலால் வரியை உயர்த்தியுள்ளது.

எனவே, மக்களின் பொருளாதார நிலை உணர்ந்து உடனடியாக, மோடி- அமித்ஷா தலைமையிலான அரசு பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலைகளைக் குறைக்கவேண்டும்.

மத்திய அரசு இதற்கு மேலும், நடுத்தர, விவசாய, வாகன ஓட்டுநர்கள், சிறு, குறு வணிகர்களை வஞ்சிக்கும் வகையில் எந்த வரிகளையும் விதிக்கக்கூடாது” என வலியுறுத்தியுள்ளார்.

இதையும் படிங்க: கோவிட்-19 நெருக்கடி: ஆந்திரா கோயில்களில் சிறப்பு யாகம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.