நாட்டில் வேகமாக பரவிவரும் கரோனா வைரஸை கட்டுப்படுத்தும் நோக்கில் அத்தியாவசிய பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள், நிறுவனங்கள் தவிர மற்ற அனைத்து கடைகளையும் மூட மத்திய, மாநில அரசுகள் உத்தரவிட்டிருந்தன.
இந்நிலையில், நேற்று செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், ஊரடங்கு உத்தரவால் பாதிக்கப்பட்டுள்ள சிறு, குறு நிறுவனங்களுக்கு மத்திய அரசு தேவையான உதவிகளை செய்யும் என தெரிவித்திருந்தார்.
இதுகுறித்து, மத்திய அரசு ரிசர்வ் வங்கி மற்றும் இந்திய பங்கு மற்றும் பரிவர்த்தனை வாரியத்திடம் (SEBI) ஆலோசனை நடத்திவருகிறது. மேலும், நிதி அமைச்சகம் சிறு, குறு நிறுவனங்களுக்கு வழங்கவேண்டிய உதவிகள் குறித்து ஆலோசனை வழங்குவதற்காக குழு ஒன்றினை உருவாக்கியுள்ளது.
தனியார் செய்தி நிறுவனமான ராய்ட்டர்ஸ் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், நிதி அமைச்சகம், சிறு குறு நிறுவனங்களுக்கு அளிப்பதற்காக 20 பில்லியன் டாலர்கள் ஒதுக்கவுள்ளதாக தெரிவித்திருந்தது.
மேலும் படிங்க: கரோனா பாதிப்பு: பொருளாதாரச் சீரமைப்புக்கு முக்கிய அறிவிப்பை வெளியிடும் நிதிமைச்சர்