இது தொடர்பாக விழா ஒன்றில் பேசிய மத்தியப் பிரதேச முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகான், "அரசு வேலைகளில் மத்தியப் பிரதேச இளைஞர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். மாநிலத்தில் உள்ள வேலை வாய்ப்புகளை தங்கள் மாநில இளைஞர்களுக்கு வழங்குவதற்கான சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்" எனத் தெரிவித்தார்.
மேலும் அவர் கூறுகையில், "வேலைவாய்ப்புகளில் பற்றாக்குறை ஏற்படும் சமயத்தில், இளைஞர்களை பாதுகாப்பது மாநில அரசின் கடமையாகும். 10, 12ஆம் வகுப்பு மதிப்பெண்கள் அடிப்படையில் மாநில இளைஞர்களுக்கு வேலை வழங்குவது தொடர்பான நடவடிக்கைகள் உடனடியாக மேற்கொள்ளப்படும்" என்றார்.