இது குறித்து சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ட்ரோன் உற்பத்தியாளர்கள், இறக்குமதியாளர்கள், ட்ரோன் விற்பனையாளர்கள் உள்ளிட்டோர் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகத்திடம் உரிய அனுமதி பெறவேண்டும்.
அங்கீகரிக்கப்படாதா, ஆளில்லாத விமானங்களை அங்கீகரிக்கப்ட்ட வர்த்தகர்களைத் தவிர வேறு யாருக்கும் விற்பனை செய்யக்கூடாது. ஆளில்லா விமானங்களின் உற்பத்தி, பராமரிப்பு வசதியை ஆய்வு செய்ய இந்த வரைவு விதிகளின் கீழ் ஆய்வு செய்ய சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகத்துக்கு அதிகரம் உண்டு.
அனுமதியளிக்கப்படாத எந்த சுமையையும் ஆளில்லா விமானங்கள் சுமக்க கூடாது. பொதுவாக இந்தியாவில் 250 கிராம் எடைக்கு குறைவாக உள்ள ட்ரோன்கள் மட்டுமே பயன்படுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
அதைவிட கூடுதல் எடையுள்ள ஆளில்லாத விமானங்களை தகுதிவாய்ந்த ரிமேட் விமானிகளே இயக்கவேண்டும்" என்று தெரிவிக்கப்பட்டது.
இதையும் படிங்க: மருந்துகள் கொண்டு செல்லப் பயன்படும் ட்ரோன்கள்...!