ராபி பருவ பயிர்களுக்கான அடிப்படை ஆதார விலையை உயர்த்தி மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக மத்திய வேளாண்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் மக்களவையில் பேசியதாவது, ராபி பருவத்தின் முக்கிய பயிரான கோதுமையின் அடிப்படை ஆதார விலை குவிண்டாலுக்கு ரூ.50 அதிகரிக்கப்பட்டு ரூ.1,975ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
அதற்கடுத்தபடியாக,
- பருப்பின் அடிப்படை ஆதார விலை, குவிண்டாலுக்கு ரூ.225 உயர்த்தப்பட்டு, ரூ.5,100ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது
- பார்லியின் அடிப்படை ஆதார விலை குவிண்டாலுக்கு ரூ.75 உயர்த்தப்பட்டு, ரூ.1,600ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது
- கடுகின் அடிப்படை ஆதார விலை குவிண்டாலுக்கு ரூ.225 உயர்த்தப்பட்டு, ரூ.4,650ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது
- பயிறுகளின் அடிப்படை ஆதார விலை குவிண்டாலுக்கு ரூ.300 உயர்த்தப்பட்டு, ரூ.5,100ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது
- குங்கும பூவின் அடிப்படை ஆதார விலை குவிண்டாலுக்கு ரூ.112 உயர்த்தப்பட்டு, ரூ.5,327ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது
புதிய வேளாண் மசோதா தொடர்பாக பொய் கருத்துகளை எதிர்க்கட்சிகள் பரப்பிவருதாகவும், வேளாண் மக்களுக்கான அடிப்படை ஆதார விலையை உறுதி செய்வதில் மத்திய அரசு உறுதியாக உள்ளதாகவும் வேளாண்துறை அமைச்சர் தோமர் மக்களவையில் தெரிவித்தார்.
இதையும் படிங்க: விவசாயிகள் தற்கொலை பற்றி பல மாநில அரசுகள் முறையாக தகவல் அளிப்பதில்லை - மத்திய உள்துறை இணை அமைச்சர்